Skip to main content
தேசிய நூலக வாரியத்துக்கு வயது 30
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

தேசிய நூலக வாரியத்துக்கு வயது 30

வாசிப்புநேரம் -
சிங்கப்பூரில் புத்தகங்களை வாசிப்பது எளிதாகிறது.

எட்டு இடங்களில் புத்தகங்கள் மக்களை நாடி வருகின்றன.

தேசிய நூலகத்தின் 30 ஆண்டு நிறைவுக் கொண்டாட்டத்தின் அங்கமாக அந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இன்று முதல் இம்மாதம் 20ஆம் தேதிவரை ஆர்ச்சர்ட் ரோட்டில் புத்தகங்கள் வைக்கப்பட்டிருக்கும் 8 பகுதிகளைக் காணலாம்.

உடல்மனநலன், உணவு, பயணம் போன்ற தலைப்புகளில் 30 உள்ளூர்ப் பிரபலங்கள் நூல்களைப் பரிந்துரைத்துள்ளனர்.

சிங்கப்பூரர்களிடையே வாசிப்புப் பழக்கத்தை இந்த முயற்சி மீண்டும் தூண்டும் என்று நம்புவதாய்த் தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சர் ஜோசபின் தியோ (Josephine Teo)
சொன்னார்.

READ30 தொடக்க நிகழ்ச்சியில் அவர் கலந்துகொண்டார்.
அன்றாடம் வாசிப்பது ஒருவருக்கொருவர் அன்பாக நடந்துகொள்ள உதவும் என்றார் திருவாட்டி தியோ.
 
ஆதாரம் : Others

மேலும் செய்திகள் கட்டுரைகள்