Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

தேசிய நடமாட்டச் சவால் திட்டத்தில் மாற்றங்கள்

வாசிப்புநேரம் -
தேசிய நடமாட்டச் சவால் திட்டத்தில் மாற்றங்கள்

(படம்: Pexels/Daniel Reche)

சிங்கப்பூரின் தேசிய நடமாட்டச் சவால் திட்டம் மேம்படுத்தப்படுகிறது.

தற்போதைய இயக்கம் ஆறு மாதத் தொடர் நடவடிக்கைகளை உள்ளடக்குகிறது.  

மக்கள் தங்கள் தினசரி உடற்பயிற்சி நடவடிக்கைகளைப் பதிவு செய்வதன் மூலம் திட்டத்தில் பங்கேற்கலாம்.

ஆனால் வரும் ஏப்ரல் மாதத்திலிருந்து சவாலில் எந்நேரமும் பங்கேற்கலாம். அதில் பங்கேற்பதன் மூலம் தினமும் மக்கள் புள்ளிகளைச் சேமிக்கலாம்.

நோய்ப்பரவலின்போதும் மக்கள் துடிப்புமிக்க வாழ்க்கைமுறையைப் பின்பற்ற ஊக்குவிக்க முடியும் என்று சுகாதார மேம்பாட்டு வாரியம் குறிப்பிட்டது.

கிருமித்தொற்றுக்கு எதிரான அதிரடித்திட்டம் நடப்பில் இருந்தபோது உடற்பயிற்சியில் ஈடுபடுவோர் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்தது என்று அது தெரிவித்தது.

ஆனால் கடந்த ஆண்டு போனஸ் சவால்கள் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து உடற்பயிற்சியில் ஈடுபடுவோர் எண்ணிக்கை அதிகரித்தது என்று வாரியம் தெரிவித்தது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்