Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

உள்ளூரிலும் உலகளவிலும் தாக்கத்தை ஏற்படுத்திய மூவருக்குக் கௌரவ முனைவர் பட்டம்

வாசிப்புநேரம் -
உள்ளூரிலும் உலகளவிலும் தாக்கத்தை ஏற்படுத்திய மூவருக்குக் கௌரவ முனைவர் பட்டம்

படம்: NUSNews

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

சிங்கப்பூர்த் தேசியப் பல்கலைக்கழகம் மூவருக்குக் கௌரவ முனைவர் பட்டங்களை வழங்கியுள்ளது.

பொதுத் தூதர் சான் ஹெங் சீ (Chan Heng Chee), சமூக விஞ்ஞானி டாக்டர் நோலீன் ஹெய்சர் (Dr Noeleen Heyzer), அனைத்துலக தொழில்நுட்ப முன்னோடி வோங் கிட் லியொங் (Wong Ngit Liong) ஆகியோர் கௌரவ முனைவர் பட்டங்களைப் பெற்றனர்.

அது குறிப்பிடத்தக்க சேவை புரிந்தோருக்கும் உள்ளூரிலும் உலகளவிலும் தாக்கத்தை ஏற்படுத்தியோருக்கும் வழங்கப்படும் உயரிய அங்கீகாரம்.

திருவாட்டி சான் 1989 முதல் 1991ஆம் ஆண்டு வரை ஐக்கிய நாட்டு நிறுவனத்திற்கான சிங்கப்பூரின் நிரந்தரத் தூதுராகச் சேவையாற்றினார்.

1996ஆம் ஆண்டு முதல் 2012ஆம் ஆண்டு வரை அவர் அமெரிக்காவிற்கான சிங்கப்பூர்த் தூதராய் இருந்தார்.

கொள்கை ஆய்வு, அனைத்துலக உறவுகள் உள்ளிட்ட அம்சங்களில் பணியாற்றிய திருவாட்டி சான் கௌரவிக்கப்பட்டார்.

ஐக்கிய நாட்டு நிறுவனத்தில் உதவித் தலைமைச் செயலாளர் எனும் பதவியை வகித்த முதல் சிங்கப்பூர்ப் பெண் என்ற பெருமை டாக்டர் ஹெய்சரைச் சேரும்.

உலகளவில் பெண்கள் அதிகாரம் பெறுவதை முன்னெடுத்துச் செல்வதில் சிறந்த தலைமைத்துவத்திற்காக அவர் கெளரவிக்கப்பட்டார்.

திரு வோங் அனைத்துலகத் தொழில்நுட்பத் துறையில் தலைவராகவும் முன்னோடியாகவும் விளங்குகிறார்.

நாட்டின் உயர்கல்விக்கும் தேசிய வளர்ச்சிக்கும் அவர் பங்களித்திருக்கிறார்.
ஆதாரம் : Others

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்