Skip to main content
தேசியப் பல்கலைக்கழகத்தில் AI பட்டப்படிப்பு அறிமுகம்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

தேசியப் பல்கலைக்கழகத்தில் AI பட்டப்படிப்பு அறிமுகம்

வாசிப்புநேரம் -
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

செயற்கை நுண்ணறிவுத் துறையில் (Artifical Intelligence - AI) ஆர்வம் கொண்ட மாணவர்களுக்கு கூடுதல் தெரிவுகள் வழங்கப்படுகின்றன.

உள்ளூரில் செயற்கை நுண்ணறிவுத் திறனாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க சிங்கப்பூர்த் தேசியப் பல்கலைக்கழகம் 4 புதிய பட்டப் பாடங்களை அறிமுகம் செய்திருக்கிறது.

தேசியச் செயற்கை நுண்ணறிவு உத்தியின் ஒரு பகுதியாக அவை அறிமுகம் காண்கின்றன.

தேசியப் பல்கலைக்கழகத்தில் இரண்டு புதிய கட்டடங்களின் அதிகாரத்துவத் திறப்புவிழாவில் பேசிய கல்வி அமைச்சர் சான் சுன் சிங் (Chan Chun Sing) இதனை அறிவித்தார்.

Shopee இணைய வர்த்தக நிறுவனத்தின் உரிமை நிறுவனமான Sea, அந்தக் கட்டடங்களை அமைக்க 50 மில்லியன் வெள்ளியை அன்பளிப்பாக வழங்கியது.

செயற்கை நுண்ணறிவுத் துறையில் இளநிலை முதல் முதுநிலைப் பட்டம் வரை பயிலலாம்.

செயற்கை நுண்ணறிவு மாதிரிகள், வர்த்தகச் செயல்பாடுகள், கணினிப் பாகங்களின் மேம்பாடு ஆகிய அம்சங்களில் மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படும்.
ஆதாரம் : CNA

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்