Skip to main content
அனுமதியின்றி அகற்றப்பட்ட மரங்கள்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

அனுமதியின்றி அகற்றப்பட்ட மரங்கள் - NParks விசாரணை

வாசிப்புநேரம் -
அனுமதியின்றி அகற்றப்பட்ட மரங்கள் - NParks விசாரணை

(படம்: Facebook/Raffles' Banded Langurs)

தேசியப் பூங்காக் கழகம் (NParks), அனுமதியின்றி மரங்கள் அகற்றப்பட்ட சம்பவத்தை விசாரிப்பதாய்த் தெரிவித்திருக்கிறது.

சம்பவம் லோவர் பியர்ஸ் (Lower Peirce) நீர்த்தேக்கத்தில் நடந்தது.

நாடளாவிய பசுமைத் திட்டத்தின்கீழ் நடப்பட்ட மரக்கன்றுகள் அகற்றப்பட்ட செடிகொடிகளில் ஒரு பகுதி.

சுமார் 40 மரக்கன்றுகளும் புதர்களும் அகற்றப்பட்டன.

அந்த இடத்தில் சில பொருள்களைத் தற்காலிகமாக வைப்பதற்கு ஒரு குத்தகையாளர் செடிகொடிகளை அப்புறப்படுத்தியதாகத் தெரிவிக்கப்பட்டது.

குத்தகையாளர் யார் என்பதைக் கழகம் வெளியிடவில்லை.

அந்தப் பகுதியில் மீண்டும் செடிகளை நடக் கழகம் திட்டமிடுகிறது.

தேசியப் பூங்காக்களிலும் இயற்கைப் பாதுகாப்புப் பகுதிகளிலும் மரங்களையும் செடிகளையும் அனுமதியின்றி வெட்டுவது குற்றமாகும்.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் 6 மாதம் வரையிலான சிறை, 50,000 வெள்ளி வரையிலான அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
ஆதாரம் : CNA

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்