கடற்படையின் கப்பலில் ஏறிப் பார்க்க வாய்ப்பு
படம்: CNA
This audio is generated by an AI tool.
Vivo City கடைத்தொகுதியில் கடற்படைக் கண்காட்சி அமைக்கப்படவிருக்கிறது.
தனிச்சிறப்புமிக்க RSS Resolution கப்பலில் ஏறிப் பார்ப்பதற்குப் பொதுமக்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும்.
அடுத்த மாதம் 21ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை கண்காட்சி நடைபெறும்.
RSS Resolution கப்பல் கடற்படையின் ஆகப்பெரிய கப்பல்களில் ஒன்று.
அதன் கட்டுப்பாட்டு அறை, செயல்பாடுகள் ஆகியவற்றைப் பற்றி அறிந்துகொள்ளவும் முடியும்.
மேலும் கடற்படையைச் சேர்ந்த S-70B Seahawk ரக ஹெலிகாப்டரையும் அவர்கள் நேரில் காணலாம்.
Fast Craft Utility கப்பலில் பயணம் செய்வதற்கான வசதியும் கண்காட்சியில் இடம்பெறவிருக்கிறது.
நாட்டின் தெற்குக் கரையோரத்தில் அழகிய வானுயர் கட்டடங்களைப் பார்த்தபடியே கப்பலில் பயணம் செய்யலாம்.
அதற்கான நுழைவுச் சீட்டுகள் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படும்.
சிங்கப்பூர் ஆயுதப்படையின் 60 ஆண்டை அனுசரிக்கும் வகையில் அதில் SAF60 காட்சியகமும் இடம்பெறும்.