மருத்துவ சிகிச்சையில் AI - விரைவில்
வாசிப்புநேரம் -
படம்: Envato Elements
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
சிங்கப்பூரில் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க விரைவில் செயற்கை நுண்ணறிவு மாதிரிகள் உதவவிருக்கின்றன.
அதற்காக உள்ளூர் நோயாளிகளின் தகவல்கள், மருத்துவ வழிமுறைகள் ஆகியவற்றை உள்ளடக்கிய செயற்கை நுண்ணறிவுத் தளங்கள் உருவாக்கப்படும்.
வெளிநாட்டுத் தரவுகளுக்குப் பதிலாக உள்ளூர் தரவுகள் மூலம் நோய்களைக் கண்டறிந்து சிகிச்சையளிக்க அவை உதவும்.
முதலில் நீரிழிவு, கண் நோய்கள் ஆகியவற்றுக்கான சிகிச்சையில் செயற்கை நுண்ணறிவு மாதிரிகள் பயன்படுத்தப்படும் பிறகு படிப்படியாகச் சுகாதாரக் கட்டமைப்புக்கு அது விரிவுபடுத்தப்படும்.
NCS தொழில்நுட்ப நிறுவன நிகழ்ச்சியில் சுகாதார அமைச்சர் ஒங் யீ கங் அதனைத் தெரிவித்தார்.
நிறுவனங்கள் செயற்கை நுண்ணறிவைப் பெரிய அளவில் பயன்படுத்த உதவும் புதிய கூட்டு முயற்சிகளையும் கருவிகளையும் NCS அறிமுகப்படுத்தியுள்ளது.
சுகாதாரப் பராமரிப்பு, கல்வி, போக்குவரத்து போன்றவற்றில் செயற்கை நுண்ணறிவை அதிகமாகப் பயன்படுத்தும் வழிகளை NCS ஆராய்கிறது.
செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவதில் இனி சவால் இல்லை.
ஆனால், அதைப் பெரிய அளவில் பயன்படுத்திச் செயல்முறையை மாற்றியமைப்பதே மாபெரும் சவால் என்று நிறுவனம் சொன்னது.
அடுத்த மூவாண்டில் 130க்கும் அதிகமான செயற்கை நுண்ணறிவு நிபுணர்களை வேலைக்கு எடுப்பதற்கு சிங்கப்பூரின் மின்னிலக்கத் துறையுடன் NCS இணைந்து செயல்படுகிறது.

ஆதாரம் : CNA