Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர் செய்தியில் மட்டும்

வானத்திலிருந்து 1,600 முறைக்கும் மேல் குதித்துள்ள சிவப்புச் சிங்கம்!

வாசிப்புநேரம் -

தேசிய தின அணிவகுப்பு என்று வரும்போது சிவப்புச் சிங்கங்களின் அங்கம் சிங்கப்பூரர்களின் மனத்தில் நீங்கா இடம் பிடித்திருக்கும் ஒன்று....

அண்ணாந்து பார்க்கும்போது...வானத்தில் சில சிவப்புப் புள்ளிகள்...சிவப்புப் புகை...

மெல்ல மெல்லக் கீழே இறங்கும் அந்தப் புள்ளிகளிலிருந்து சிவப்புக் குடைகள் விரியும்..

அவை காற்றோடு ஆடி அசையும் வேளையில் கண்ணுக்குத் தெரிவர் நமது 'சிவப்புச் சிங்கங்கள்!'

வான்குடை வீரர்களின் சாகசத்தை அணிவகுப்பில் மட்டுமல்லாமல் வீடமைப்பு வட்டாரங்களிலும் நேரில் காண வாய்ப்பு உண்டு!

வீரர்கள் தேசிய தினத்தை முன்னிட்டு, வரும் 7-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை, பிஷான், கிம் மோ ஆகிய வட்டாரங்களில் சாகசம் புரியவிருக்கின்றனர்.

  • பீஷான் ரயில் நிலையத்துக்கு அருகிலுள்ள திடல் - காலை 8.40 மணி முதல் 9.30 மணி வரை
  • கிம் மோ உணவங்காடி நிலையத்துக்கு அருகிலுள்ள திடல் - காலை 9.10 மணி முதல் 10 மணி வரை

ஒன்று மிதக்கும் மேடை... இன்னொன்று திடல்... இவற்றில் ஏதேனும் வேறுபாடு உண்டா? 

எல்லாமே ஒன்றுதான் என்றார் வான்குடை வீரர், மூத்த வாரண்ட் அதிகாரி மகேஷ்வரன்.
 

(படம்: பார்த்திபன் மாயழகன்)

இதுவரை  வானத்திலிருந்து 1,655 முறை குதித்துள்ள அவர் இவ்வாண்டு 4-ஆவது முறையாக தேசிய தின அணிவகுப்பில் பங்கேற்கிறார்.

"சிரமம் என்று சொல்லமுடியாது...எல்லாமே ஒன்றுதான். ஒரே விதத்தில்தான் நாங்கள் ஆயத்தமாகிறோம். அனைவரும் ஒன்றாக ஒத்திகை பார்ப்பதற்கு நேரம் ஒதுக்குவதே முக்கியம்" என்றார் மகேஷ்வரன்.

சிவப்புச் சிங்கங்கள் மூன்றாவது ஆண்டாகக் குடியிருப்பு வட்டாரத்தில் சாகசம் புரியவிருக்கின்றனர்.

அவற்றைப் பார்ப்பதற்கு அனுமதி இலவசம்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்

Aa