Skip to main content
தேசிய தின அணிவகுப்பு
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

தேசிய தின அணிவகுப்பு - முதல் முறையாக இரண்டு இடங்களிலிருந்து வான்குடை சாகசம்

வாசிப்புநேரம் -
தேசிய தின அணிவகுப்பு வரலாற்றில் முதன்முறையாக இரண்டு இடங்களிலிருந்து வான்குடை சாகசம் இடம்பெறவிருக்கிறது.

"Jump of Unity" என்றழைக்கப்படும் அது, சிங்கப்பூரின் 60ஆம் பிறந்தநாளைக் கொண்டாடுவதற்குச் செய்யப்பட்டிருக்கும் சிறப்பு ஏற்பாடு.

சிவப்புச் சிங்கங்களும், கடற்படை முக்குளிப்பாளர்களும் அந்தச் சாகசத்தை நிகழ்த்தவிருக்கின்றனர்.

முதலில் மரினா பேயிலும் பிறகு பாடாங்கிலும் வான்குடை சாகசம் இடம்பெறும்.

ஏப்ரல் மாதமே பயிற்சி தொடங்கிவிட்டது.

2018 ஆம் ஆண்டுக்குப் பிறகு முதன்முறை கடற்படை முக்குளிப்பாளர்கள் வான்குடை சாகசத்தில் ஈடுபடவுள்ளனர்.

கடற்படை முக்குளிப்பாளர்கள் 5,000 அடி உயரத்தில் வான்குடையில் பறந்து பிறகு Esplanade முன்பிருக்கும் நீருக்குள் இறங்குவர்.
ஆதாரம் : CNA

மேலும் செய்திகள் கட்டுரைகள்