Skip to main content
NDP தேசியக் கல்விக் காட்சி
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

NDP தேசியக் கல்விக் காட்சி - கவச வாகனம் சாலை விளக்கை உரசியது

வாசிப்புநேரம் -
தேசிய தின அணிவகுப்பின் தேசியக் கல்விக் காட்சியின்போது கவச வாகனத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் அது ஒரு சாலை விளக்கில் உரச நேர்ந்தது.

நேற்றிரவு சுமார் 7.20 மணிக்கு அந்தச் சம்பவம் நடந்ததாகத் தற்காப்பு அமைச்சின் பேச்சாளர் CNAவிடம் தெரிவித்தார்.

தேசிய தின வாகன அணிவகுப்பு அங்கத்தில் L2SG கவச வாகனம் தொழில்நுட்பக் கோளாற்றை எதிர்கொண்டது.

நார்த் பிரிட்ஜ் ரோட்டில் (North Bridge Road) அந்தச் சம்பவம் ஏற்பட்டது.

SGRV Facebook பக்கத்தில் காணொளி பகிரப்பட்டது.

கவச வாகனம் நாடாளுமன்ற இல்லத்துக்கு அருகே வலப்பக்கம் திரும்பும்போது சாலை விளக்கில் உரசுவது காணொளியில் தெரிகிறது.

யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் கவச வாகனம் அப்போது பொதுமக்களுக்கு அப்பால் பாதுகாக்கப்பட்ட பகுதிக்குள் இருந்தது என்றும் தற்காப்பு அமைச்சு தெரிவித்தது.
ஆதாரம் : CNA

மேலும் செய்திகள் கட்டுரைகள்