"தேசிய தின அணிவகுப்பில் சுமுகமாகத் தரையிறங்குவதில் பிரச்சினையை எதிர்நோக்கிய வான்குடை வீரருக்கு அறுவைச் சிகிச்சை அவசியமில்லை"
(படம்: Facebook/Ng Eng Hen)
தேசிய தின அணிவகுப்பில் சுமுகமாகத் தரையிறங்குவதில் பிரச்சினையை எதிர்நோக்கிய வான்குடை வீரருக்கு அறுவைச் சிகிச்சை அவசியமில்லை என்று கூறப்பட்டுள்ளது.
தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென் (Ng Eng Hen) அதனை Facebook-இல் பதிவிட்டார்.
வான்குடை சாகசம் புரிந்த 10 சிவப்புச் சிங்கங்களில் இறுதியாகத் தரையிறங்கியவர் மூன்றாம் வாரண்ட் அதிகாரி ஜெஃப்ரி ஹெங் (Jeffrey Heng).
சுமுகமாகத் தரையிறங்குவதில் பிரச்சினையை எதிர்நோக்கியதில், அவர் கீழே விழுந்தார்.
காயமுற்ற அதிகாரி ஹெங் தற்போது சீரான நிலையில் உள்ளதாகவும் அவர் முழுமையாகக் குணமடைவார் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் டாக்டர் இங் கூறினார்.