தேசிய தின அணிவகுப்புக்கு எங்கு எப்படி எப்போதிலிருந்து நுழைவுச்சீட்டுகளுக்கு விண்ணப்பிக்கலாம்?
வாசிப்புநேரம் -

(படம்: Ili Nadhirah Mansor/TODAY)
இவ்வாண்டின் தேசிய தின அணிவகுப்பை நேரில் காண விரும்புவோர், நுழைவுச் சீட்டுகளுக்கு, வரும் திங்கட்கிழமை முதல் விண்ணப்பிக்கலாம்.
NDP.gov இணையவாசலில் வரும் 29ஆம் தேதிமுதல், அடுத்த மாதம் 12ஆம் தேதிவரை அவ்வாறு செய்யலாம்.
சிங்கப்பூரர்கள், நிரந்தரவாசிகள் நுழைவுச் சீட்டுகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
தேசிய தின அணிவகுப்பைத் தவிர்த்து, இரண்டு முன்னோட்ட நிகழ்ச்சிகளைக் காணவும் நுழைவுச் சீட்டுகளுக்குப் பதிவுசெய்யலாம்.
மூன்று நிகழ்ச்சிகளுக்கும் இரண்டு, நான்கு அல்லது ஆறு நுழைவுச்சீட்டுகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
முதலில் விண்ணப்பம் செய்வோருக்கு முதல் சலுகை என்றில்லாமல், மின்னியல் குலுக்கல் முறையில் நுழைவுச் சீட்டுகள் வழங்கப்படும்.
நுழைவுச் சீட்டுகளைப் பெறுவோருக்கு அடுத்த மாத இறுதியில் மின்னஞ்சல் மூலம் அதுபற்றித் தெரிவிக்கப்படும்.

ஆதாரம் : Mediacorp Seithi