Skip to main content
எலித் தொல்லை
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

எலித் தொல்லை - சமாளிக்க நவீன கருவிகள்

வாசிப்புநேரம் -
எலித் தொல்லை - சமாளிக்க நவீன கருவிகள்

படம்: CNA

தேசியச் சுற்றுப்புற அமைப்பு எலித்தொல்லையைக் கையாளக் கூடுதல் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவது குறித்து ஆராய்கிறது.

காணொளிப் பகுப்பாய்வு, கண்காணிப்புத் தொழில்நுட்பம், சிறப்புக் கருவிகளின் பயன்பாடு போன்றவற்றின் மூலம் எலிகளைத் துடைத்தொழிக்க முயற்சி எடுக்கப்படும்.

தற்போது எலிகளின் நடமாட்டம் அதிகமிருக்கும் இடங்களைக் கண்காணிக்கவும் அடையாளம் காணவும் சிறப்புக் கேமராக்கள் பயன்படுத்தப்படுகின்றன.

ஜனவரியிலிருந்து ஏப்ரல்வரை தேசியச் சுற்றுப்புற அமைப்பு 40 அகச் சிவப்புக் கருவிகளைப் பயன்படுத்தியிருக்கிறது.

கடந்த ஆண்டு முழுதும் அத்தகைய 84 கருவிகள் பயன்படுத்தப்பட்டன.

பெரும்பாலும் இரவில் சுற்றித்திரியும் எலிகள் மனிதர்கள் அருகில் வருவதில்லை. அவற்றைக் கண்காணிப்பதில் சிரமங்கள் இருக்கின்றன.

அறிவார்ந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி எலிகள் கூடும் இடத்தைத் தானியக்க முறையில் கண்காணிக்கும் வழிகள் ஆராயப்படுகின்றன. நேரத்தை மிச்சப்படுத்தவும் அது உதவும்.

எலிகள் குழாய்கள், குளிர்சாதனங்கள் வழி இரையும் புகலிடமும் தேடி மேல்மாடிகளுக்குச் செல்வதாகக் கடந்த ஈராண்டாகத் திரட்டப்பட்ட தகவல்களில் தெரியவந்துள்ளது.

லிட்டில் இந்தியா உள்ளிட்ட சில பகுதிகளில் எலிகளின் நடமாட்டம் குறைந்திருப்பதாகவும் அமைப்பு தெரிவித்தது.
ஆதாரம் : Mediacorp Seithi

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்