Skip to main content
2026 ஜனவரி
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

2026 ஜனவரி-மார்ச்: பள்ளி வட்டாரங்களில் 2,000 வேக வரம்பு மீறல்கள்

வாசிப்புநேரம் -
பள்ளி வட்டாரங்களில் இவ்வாண்டின் முதல் 3 மாதங்களில் கிட்டத்தட்ட 2,000 வேக வரம்பு மீறல்கள் பதிவானதாக நிலப் போக்குவரத்து ஆணையம் கூறியிருக்கிறது.

இவ்வாண்டுத் தொடக்கத்திலிருந்து வாகனங்கள் பள்ளி வட்டாரங்களில் மணிக்கு 40 கிலோமீட்டர் வேகத்துக்கு மேல் செல்லக்கூடாது.

மாணவர்களுக்குப் பாதுகாப்பான சூழலை உருவாக்க நாள் முழுவதும் வேக வரம்பை நடைமுறைப்படுத்துவதாக ஆணையம் கூறியது.

இதற்கு முன் பள்ளி தொடங்கும் நேரம், முடியும் நேரம் போன்றவற்றில் மட்டுமே அந்த வேக வரம்பு இருந்தது.

வேக வரம்பை மீறுவோருக்குத் தண்டனையும் கடுமையாகியுள்ளது.

அவர்கள் கூடுதலாக 100 வெள்ளி அபராதம் செலுத்தவேண்டியிருக்கும்.

மேலும் 2 குற்றப்புள்ளிகள் விதிக்கப்படலாம்.
 
ஆதாரம் : Mediacorp Seithi

மேலும் செய்திகள் கட்டுரைகள்