இல்ல மேம்பாட்டுத் திட்டத்துக்குச் சுமார் 30,000 வீடுகள் தேர்வு
வாசிப்புநேரம் -

(படம்: Google Images)
சிங்கப்பூரில் இல்ல மேம்பாட்டுத் திட்டத்துக்குச் சுமார் 30, 000 வீடுகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் அது பற்றி விவரம் வெளியிட்டது.
அரசாங்கம் அதற்காக 400 மில்லியன் வெள்ளிக்கு மேல் ஒதுக்கியிருக்கிறது.
சுவா சூ காங் (Choa Chu Kang), பாசிர் ரிஸ் (Pasir Ris), தெம்பனிஸ் (Tampines), ஜூரோங் வெஸ்ட் (Jurong West) உள்ளிட்ட பகுதிகளில் வீடுகள் புதுப்பிக்கப்படும்.
இல்ல மேம்பாட்டுத் திட்டம் 2007ஆம் ஆண்டு அறிமுகமானது. கடந்தாண்டு (2024) மார்ச் மாதம் வரை அரசாங்கம் அதற்காகச் சுமார் 4 பில்லியன் வெள்ளியைச் செலவிட்டிருக்கிறது.
குடியிருப்பாளர்கள் EASE திட்டத்தின்கீழ் மூத்தோருக்கு உகந்த வசதிகளைத் தேர்வு செய்யலாம்.
EASE 2.0 கடந்தாண்டு ஏப்ரல் மாதம் தொடங்கப்பட்டது.
அதில் மடக்கக்கூடிய குளியல் நாற்காலிகள், கைப்பிடிகள் உள்ளிட்ட புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
இல்ல மேம்பாட்டுத் திட்டத்துக்கு விண்ணப்பித்த சுமார் 30,000 பேரில் கிட்டத்தட்ட பாதிப் பேர் மூத்தோருக்கு ஆதரவான வசதிகளைத் தேர்வு செய்துள்ளனர்.

ஆதாரம் : CNA