8,000 BTO வீடுகள் விற்பனைக்கு
(படம்: Housing and Development Board)
This audio is generated by an AI tool.
வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் தேவைக்கேற்பக் கட்டி விற்கப்படும் சுமார் 8,000 புதிய வீடுகளை விற்பனைக்கு விட்டுள்ளது.
பிடோக் (Bedok), கேலாங் (Geylang), செம்பவாங் (Sembawang), தெங்கா (Tengah), தோ பாயோ (Toa Payoh), யீஷூன் (Yishun) ஆகிய வட்டாரங்களில் அந்த வீடுகள் அமைந்துள்ளன.
புதிய வீடுகளில் மூன்றில் ஒரு பங்குக்கும் அதிகமானவை, ஒற்றையரும் முதியோரும் வாங்கக்கூடிய ஈரறை Flexi வீடுகள்.
குடும்பங்களுக்கான மாத வருமான உச்சவரம்பு 16,000 வெள்ளியாக உயர்த்தப்பட்ட பிறகு நடைபெறும் முதல் விற்பனை நடவடிக்கை இது.
ஒற்றையருக்கு அது 8,000 வெள்ளியாக அதிகரிக்கப்பட்டது.
தோ பாயோவில் 55 வயதுக்கு மேற்பட்டோருக்கான சமூகப் பராமரிப்பு வீடுகளும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
விண்ணப்பம் இன்று ஆரம்பமாகிறது.
11ஆம் தேதிவரை வீடுகளுக்கு இணையத்தில் விண்ணப்பிக்கலாம்.