Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

COVID-19 நோயாளிகளில் சிலருக்கு மட்டும் உயிர்வாயு தேவைப்படுவது ஏன்?

உலகெங்கிலும், கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்படுவோரில் சிலருக்கு உயிர்வாயு தேவைப்படுகிறது.

வாசிப்புநேரம் -
COVID-19 நோயாளிகளில் சிலருக்கு மட்டும் உயிர்வாயு தேவைப்படுவது ஏன்?

படம்: Antara Foto/Asep Fathulrahman/via REUTERS

உலகெங்கிலும், கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்படுவோரில் சிலருக்கு உயிர்வாயு தேவைப்படுகிறது.

அத்தகையோருக்கு மருத்துவமனைகளிலோ, வீடுகளிலோ கலன்கள் மூலம் உயிர்வாயு அளிக்கப்படுகிறது.


உயிர் வாயு என்பது என்ன?

(படம்: Pixabay)

ஆங்கிலத்தில் அதனை Oxygen என்பர். சுவாசிக்கும் காற்றில் உள்ள உயிர்வாயுவால் நாம் உயிர்வாழ்கிறோம். அது உடலில் உள்ள அணுக்களுக்குச் சக்தி அளிக்கிறது.

உடலின் ரத்த ஓட்டத்துக்கும், மூளை சரிவரச் செயல்படுவதற்கும் உயிர்வாயு தேவை.

கிருமித்தொற்றால் பாதிக்கப்படும் சிலருக்குக் கூடுதல் உயிர்வாயு தேவைப்படுவது ஏன்?

உயிர்வாயுவுக்கும் கிருமித்தொற்று சிகிச்சைக்கும் உள்ள தொடர்பு பற்றி அறிந்துகொள்ள தொற்றுநோய் நிபுணர் டாக்டர் இந்துமதியிடம் பேசியது 'செய்தி'.


கிருமித்தொற்று ஏற்பட்டோரில் யாருக்கெல்லாம் உயிர்வாயு அளிக்கப்படுகிறது?

(படம்: AP/ Tatan Syuflana)

(படம்: AP/ Tatan Syuflana)

உடலில் உள்ள ரத்தத்தில் உயிர்வாயு குறைவாக இருக்கும் நோயாளிகளுக்கு, கலன்களிலிருந்து மேலும் உயிர்வாயு அளிக்கப்படுகிறது.


உயிர்வாயு அளிப்பதால் அவர்களுக்கு என்ன நன்மை?

(கோப்புப் படம்: REUTERS)

(கோப்புப் படம்: REUTERS)

உயிர்வாயு அளிக்கப்படும் நோயாளிகள் உடனடியாக குணமடைவர் என்பதற்கு சான்று ஏதும் இல்லை. ஆனால், அவர்களின் உடல் செயல்பாடுகள் மேலும் சீராக அது உதவும்.

உதாரணத்திற்கு, ஒருவர் உண்ணும் உணவு செரித்து, அதன் சத்து உடலில் எல்லாப் பகுதிகளுக்கும் செல்வதற்கு, உடலில் போதிய அளவு உயிர்வாயு இருக்கவேண்டும்.

ரத்தத்தில் போதிய உயிர்வாயு இல்லாத நோயாளிகளுக்கு மேலும் உயிர்வாயு அளிக்கும்போது, உணவு செரிப்பது எளிமையாகும்.

அதைப் போலவே மற்ற உடல் செயல்பாடுகளுக்கும் உயிர்வாயு தேவை. அவை சீராக நடந்தால், ஒருவர் நோயிலிருந்து குணமடையும் வாய்ப்புகள் அதிகமாகும்.


உடலில் உயிர்வாயு மிகக் குறைவாக இருந்தால் என்ன நடக்கும்?

உடல் ரத்தத்தில் உயிர்வாயு மிகக் குறைவாக இருந்தால், உடலுறுப்புகளின் செயல்பாடு முடங்கத் தொடங்கும். அது உடலுக்கும் உயிருக்கும் மிக அபாயமானது.

நோயாளிகளுக்கு மட்டுமல்ல, குறைந்த அளவே உயிர்வாயு இருக்கும் அனைவருக்கும் அந்த அபாயம் நேரலாம்.


(படம்: Temasek/Facebook)

(படம்: Temasek/Facebook)

சில நாடுகளில் கொரோனா கிருமியால் கடுமையாகப் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப் போதிய உயிர்வாயுக் கலன்கள் இல்லாததால் பலரும் கவலைக்கிடமான நிலையில் இருக்கின்றனர்.

இந்தோனேசியா, மியன்மார், இந்தியா உள்ளிட்ட சில நாடுகளுக்கு சிங்கப்பூர் உயிர்வாயுக் கலன்களை நன்கொடை வழங்கி உதவியுள்ளது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்