Skip to main content
அண்டை வீட்டாரிடையே பிரச்சினை
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர் exclusive

அண்டை வீட்டாரிடையே பிரச்சினை - சமரசப் பேச்சுக்குச் செல்ல மறுக்கும் பலர்..ஏன்?

வாசிப்புநேரம் -
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

சிங்கப்பூரில் அண்டை வீட்டாரிடையே பிரச்சினை இருந்தால் பலர் அதைப் பற்றிப் பேசித் தீர்க்கத் தயங்குகின்றனர்.

சமரசப் பேச்சு நடத்தப்படும் Community mediation centre அதாவது சமூக சமரச நிலையத்துக்கு வரும் புகார்களில் 30 விழுக்காடு மட்டுமே பேச்சுவார்த்தைக்கு வருகிறது.

சமூகச் சமரச நிலையத்தில் புகார்கள்..

ஜனவரி 2025 - ஆகஸ்ட் 2025

பதிவான புகார்கள் - 1,106
சமரசப் பேச்சுவார்த்தைக்கு வந்தவை - 166 ~ 30%
சுருக்கமாகப் பார்க்க
இதற்குக் காரணம்?

அண்டைவீட்டாரில் ஒருவருக்கு பேச்சுவார்த்தையில் விருப்பம் இல்லை அல்லது இருவருக்கும் விருப்பம் இல்லை என்றால்
சமாதானப் பேச்சு இடம்பெறாது.

பேச்சுவாரத்தை நடத்துவதற்கான அழைப்பைப் பெரும்பாலோர் மறுத்துவிடுகின்றனர்.

"எப்படி நாங்கள் சொல்லிப் பார்த்தாலும் சிலர் வரமாட்டார்கள். சட்டப்படி வேறு எதையும் செய்யவும்முடியாது," என்றார் சமூக சமரச நிலையத்தின் சமரசப் பேச்சாளர் திரு ப. திருநாவுக்கரசு.

ஓர் உதாரணம் அண்மையில் யீஷூனில் நடந்த கொலைச் சம்பவம்.

இரைச்சலால் அண்டை வீட்டாரிடையே பிரச்சினை தொடங்கியது.

பிரச்சினையைத் தீர்க்கச் சமரசப் பேச்சுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது என்றாலும் சந்தேக நபர் வர மறுத்துவிட்டதாக அதிகாரிகள் கூறினர்.

சமாதானப் பேச்சு என்றால் எப்படி இருக்கும் என்றே மக்கள் அறியாததால் அதில் ஈடுபடத் தயங்குவதாகத் திரு திருநாவுக்கரசு சொன்னார்.

"தாங்கள் விரும்பும் தீர்வு நிலையத்தில் கிடைக்காது என்று அவர்கள் நினைக்கிறார்கள். ஆனால், இங்கு வந்துவிட்டால் போதும். அவர்களிடம் பேசி, அவர்கள் விரும்பும் தீர்வுக்குத் இணக்கப் படிவத்தில் கையெழுத்திடுவார்கள்," என்றார் அவர்.

சமரசப் பேச்சில் என்ன நடக்கும்?

நிபுணத்துவம் பெற்ற சமரசப் பேச்சாளரின் முன்னிலையில் ஒவ்வொருவரின் வாதமும் கேட்கப்படுகிறது. தேவைப்பட்டால் சமசரப் பேச்சாளர் தனித்தனியாக ஒவ்வொரு தரப்புடனும் பேசுவார்.

ஒவ்வொரு தரப்பும் விரும்பும் தீர்வுகள் தெரிவுகளாக வைக்கப்படுகின்றன. எது நடைமுறைக்கு சாத்தியமாக இருக்கும், இருக்காது என்பதைச் சமரசப் பேச்சாளர் எடுத்துச் சொல்வார்.

இருதரப்பும் ஒரு தீர்வில் இணக்கம் கண்டால் சட்டபூர்வமான ஒப்பந்தம் செய்யப்படும்.
சுருக்கமாகப் பார்க்க

எத்தனை முறை செல்லவேண்டும்?

சில சமயங்களில் ஒரே தடவையில் தீர்வு கிடைப்பதில்லை. தீர்வு கிடைக்கும்வரை சமரசப் பேச்சை மீண்டும் நடத்தலாம் என்று திரு திருநாவுக்கரசு சொன்னார்.

சமூக சமரச நிலையத்தில் 80 விழுக்காட்டுப் பேச்சுவார்த்தைகள் சமரசத்தில் முடிந்துள்ளன.

"அவர்களே பேசித் தீர்க்கமுடியாததால்தான் பிரச்சினையே வருகிறது.....இங்கு நாங்கள் அதற்கு வழியமைக்கிறோம். அப்படி சமரசத்தில் முடியவில்லை என்றாலும் மனத்திருப்தி கிடைக்கும்," என்றார் திரு திருநாவுக்கரசு.

வழிகள் பல இருக்கின்றன. மக்கள் மனது வைத்தால் எந்தப் பிரச்சினைக்கும் சுமுகமாகத் தீர்வு காணலாம்.
சுருக்கமாகப் பார்க்க
ஆதாரம் : Mediacorp Seithi

மேலும் செய்திகள் கட்டுரைகள்