Skip to main content
புதிய $20 பணநோட்டில் கோவிந்தசாமி பிள்ளை
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

புதிய $20 பணநோட்டில் கோவிந்தசாமி பிள்ளை - பெருமைப்படும் இந்தியர்கள்

சிங்கப்பூரின் இருநூறாம் ஆண்டு நிறைவு அனுசரிப்பிற்குச் சிறப்புச் சேர்க்கும் வண்ணம் புதிய 20 வெள்ளி பணநோட்டு வெளியிடப்பட்டது. இந்தியச் சமூகத் தலைவர் திரு. கோவிந்தசாமி பிள்ளை உள்ளிட்ட 8 முன்னோடிகளின் படங்கள் இதில் இடம்பெற்றுள்ளன.

வாசிப்புநேரம் -

Related article image
படம்: MAS

சிங்கப்பூர் இந்தியச் சமூகத்திற்கு வாரிவழங்கிய தலைவர்களுள் திரு பி. கோவிந்தசாமி பிள்ளைக்குத் தனி இடமுண்டு. சிறந்த வர்த்தகரான அவர் கொடை வள்ளலாகவும் திகழ்ந்தவர்.

இந்தியச் சமூகத் தலைவர் திரு. கோவிந்தசாமி பிள்ளை அதில் இடம்பெற்றிருப்பது குறித்து பொதுமக்களில் பலர் மிகுந்த மகிழ்ச்சி தெரிவித்தனர். சிங்கப்பூரின் வளர்ச்சியில் இந்தியர்களின் பங்கு அளப்பரியது. அதைப் பறைசாற்றும் வண்ணம் அவரது உருவப்படம் அதில் இடம்பெற்றிருப்பதாக அவர்கள் நெகிழ்ச்சியுடன் 'செய்தி'-இடம் பகிர்ந்துகொண்டனர்.

பணநோட்டைப் பெற்றுக்கொள்ள பலர் பல மணிநேரம் காத்திருந்தனர். ஆனால் அது மகிழ்ச்சியாகவே இருந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.

Related article image
Related article image

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்