இங் டெங் ஃபோங் மருத்துவமனையில் புதிய சிறுவர் மருந்தகம் திறப்பு

(கோப்புப் படம்: Try Sutrisno Foo)
சிங்கப்பூரின் மேற்கு வட்டாரத்தில் இருக்கும் சிறுவர்களைக் கவனத்தில் கொண்டு இங் டெங் ஃபோங் (Ng Teng Fong) மருத்துவமனை புதிய சிறுவர் மருந்தகத்தைத் திறந்திருக்கிறது.
புக்கிட் பாத்தோக் (Bukit Batok) போன்ற புதிய குடியிருப்புப் பேட்டைகளைக் கொண்டிருக்கும் மேற்கு வட்டாரத்தில் ஒரு மில்லியனுக்கும் அதிகமானோர் வசிக்கின்றனர்.
அந்த வட்டாரத்தில் குறைந்தது 5 விழுக்காட்டினர், 5 வயதுக்கும் குறைவான சிறுவர்கள்.
தெங்கா (Tengah) பகுதியில் புதிய நகர் உருவாகவிருப்பதால் மேற்கு வட்டாரத்தின் மக்கள்தொகை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதையொட்டித் தேசியப் பல்கலைக்கழகப் பெண்கள் சிறுவர் நிலையமும் இங் டெங் ஃபோங் பொது மருத்துவமனையின் சிறுவர் நிலையமும் சேர்ந்து 16 வயதுக்குக் குறைவான சிறுவர்களுக்குச் சிறப்புச் சேவை வழங்குகின்றன.