Skip to main content
தானியக்க வாகனங்களை மேற்பார்வையிடும் புதிய குழு
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

தானியக்க வாகனங்களை மேற்பார்வையிடும் புதிய குழு

வாசிப்புநேரம் -
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

சிங்கப்பூரில் தானியக்க வாகனங்கள் பாதுகாப்பான முறையில் போக்குவரத்துக் கட்டமைப்புடன் ஒன்றிணைக்கப்படுவதை உறுதிசெய்யக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

குடியிருப்பாளர்களுக்கான அன்றாட இணைப்பை மேம்படுத்துவது, புதிய வேலைகளை உருவாக்குவது ஆகியவற்றிலும் குழு கவனம் செலுத்தும்.

இவ்வாண்டு இறுதிக்குள் பொங்கோலில் ஓட்டுநரில்லா வாகனங்கள் அறிமுகமாகவிருக்கும் வேளையில் புதிய குழு அமைக்கப்பட்டுள்ளது.

குடியிருப்பாளர்களின் கருத்துகளுக்கு ஏற்பத் தானியக்க வாகனங்களின் அறிமுகத்தைக் குழு ஒருங்கிணைக்கும்.

அதோடு பாதுகாப்பு விதிமுறைகள், வலுவான இணையப் பாதுகாப்பு, தரவுக் கொள்கைகள் ஆகியவற்றை உருவாக்குவதில் குழு கவனம் செலுத்தும்.

பொதுச்சேவை, போக்குவரத்துத்துறை ஆகியவற்றைச் சேர்ந்த 17 உறுப்பினர்களைக் கொண்ட குழுவைத் தற்காலிகப் போக்குவரத்து அமைச்சர் ஜெஃப்ரி சியாவ் வழிநடத்துவார்.
ஆதாரம் : Others

மேலும் செய்திகள் கட்டுரைகள்