NUS Kent Ridge வளாகத்தில் ஹோட்டல்...ஆனால் பொதுமக்கள் தங்கமுடியாது
NUS
This audio is generated by an AI tool.
சிங்கப்பூர்த் தேசியப் பல்கலைக்கழகத்தின் (NUS) கென்ட் ரிட்ஜ் (Kent Ridge) வளாகத்தில் புதிய ஹோட்டல் திறக்கப்படவுள்ளது.
The Ridge என்ற ஹோட்டல் அடுத்த ஆண்டின் முற்பாதியில் செயல்படத் தொடங்கும்.
ஆனால் ஹோட்டல் பொதுமக்கள் தங்குவதற்காகத் திறக்கப்படவில்லை.
அதில் மாணவர்கள்,வெளிநாட்டிலிருந்து வரும் கல்வியாளர்கள், நிபுணர்கள் ஆகியோர் மட்டுமே தங்கமுடியும்.
வெளிநாட்டிலிருந்து வரும் கல்வியாளர்கள், ஆய்வாளர்கள் உள்ளிட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகப் பல்கலை கூறியது.
வளாகத்தில் அவர்கள் ஆய்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள வசதியாக ஹோட்டல் இருக்கும் என்று CNA கேட்ட கேள்விக்குப் பல்கலைக்கழம் பதில் அளித்தது.
The Ridge ஹோட்டலில் 185 அறைகள் இருக்கும். மூன்று வகையான அறைகள் இருக்கும்.
சிறப்பான இணையத் தொடர்பு, 24 மணி நேரச் சேவை, சந்திப்பு அறைகள் போன்றவற்றை எதிர்பார்க்கலாம்.