Skip to main content
இன நல்லிணக்கப் பராமரிப்புச் சட்டம்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

இன நல்லிணக்கப் பராமரிப்புச் சட்டம் - அரசாங்கத்திற்குக் கூடுதல் அதிகாரம் தரும் புதிய மசோதா

வாசிப்புநேரம் -
சிங்கப்பூரில் இன நல்லிணக்கப் பராமரிப்புச் சட்டத்தின்கீழ் அரசாங்கத்திற்குக் கூடுதல் அதிகாரம் வழங்கும் புதிய மசோதாவை நாடாளுமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது.

இன விவகாரங்களில் சமூக அடிப்படையிலான அணுகுமுறையைப் பயன்படுத்துவதற்கும், கட்டுப்பாட்டு உத்தரவுகளைப் பிறப்பிக்கவும் அரசாங்கத்திற்கு இனி அதிகாரம் வழங்கப்படும்.

புதிய சட்டத்தின்கீழ் சீனர்கள், மலாய்க்காரர்கள், இந்தியர்கள் ஆகியோர் சம்பந்தப்பட்ட குலமரபுச் சங்கங்கள், வர்த்தகச் சங்கங்கள் ஆகியவற்றில் வெளிநாட்டுத் தலையீட்டைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

நாடாளுமன்றத்தில் சிங்கப்பூரின் அரசமைப்புச் சட்டத்தில் மேற்கொள்ளப்படும் மாற்றங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

இன, சமய நல்லிணக்கத்தின் தொடர்பில் அமைச்சரவைக்கும் அதிபர் மன்றத்திற்கும் இடையில் வேறுபட்ட கருத்துகள் இருந்தால் அதிபர், கட்டுப்பாட்டு உத்தரவை உறுதிப்படுத்தலாம், ரத்து செய்யலாம் அல்லது மாற்றலாம்.

அரசமைப்புச் சட்டத் திருத்தத்திற்கு எதிராக 7 எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வாக்களித்தனர்.

மேலும் செய்திகள் கட்டுரைகள்