Skip to main content
நீண்ட ஆயுள்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

நீண்ட ஆயுள் - புதிய சவால்! எதிர்கொள்ளப் புதிய பொருளாதாரக் கழகம்

வாசிப்புநேரம் -
நீண்ட ஆயுள் - புதிய சவால்! எதிர்கொள்ளப் புதிய பொருளாதாரக் கழகம்

படம்: Envato Elements

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகம் நீண்ட ஆயுள் சமுதாய, பொருளாதாரக் கழகத்தைத் தொடங்கியிருக்கிறது. 

நாடு அதிமூப்படைந்த சமூகமாக மாறிக்கொண்டிருக்கும் நிலையில் அதற்கேற்ப வேலை, ஓய்வு, ஆதரவுக் கட்டமைப்பு ஆகியவற்றை ஏற்படுத்துவது பற்றி ஆராயப்படுகிறது. 

10 மில்லியன் வெள்ளி நிதியில் தொடங்கப்படும் கழகம் ஆய்வுகளைச் செயல்படுத்துவதில் கவனம் செலுத்தும்.  

அரசாங்கம், வணிகம், சமூக அமைப்புகளோடு அது சேர்ந்து பணியாற்றும். 

பிரதமர் அலுவலக அமைச்சர் இந்திராணி ராஜா, மூப்படைந்த மக்கள்தொகைக்கு ஆயத்தமாவதற்குப் பதிலாக, நீண்ட ஆயுள் சமுதாயத்துக்குத் தயாராகவேண்டும் என்று குறிப்பிட்டார். 

கல்வி, வேலை, ஓய்வு என்ற பாரம்பரிய நடைமுறை போதாது. 

இனி கற்றல், வேலை, பராமரிப்பு, பங்களிப்பு என்ற நடைமுறைக்குத் தயாராகவேண்டும் என்றார் அவர். 

நீண்ட ஆயுளுக்கு ஏற்ப மக்கள் எப்படி தங்களைத் தயார்ப்படுத்துவது என்பதைப் புதிய கழகம் ஆராய்ந்து தீர்வுசொல்லும். 

ஆதாரம் : Mediacorp Seithi

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்