ஆண்களுக்கான புதிய சுகாதார ஆதரவுக் கட்டமைப்பு
வாசிப்புநேரம் -
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
ஆண்கள் தங்களுக்கு ஏற்படும் சுகாதாரப் பிரச்சினைகள் பற்றிப் பேசவும் கேள்விகளை எழுப்பவும் ஒரு புதிய முயற்சி.
ஆண்கள் சுகாதார ஆதரவுக் கட்டமைப்பு எனும் அது இன்று சுவா சூ காங் குழுத்தொகுதியில் அறிமுகமானது.
பலருக்கு உடல்நலப் பிரச்சினைகளைப் பற்றிப்பேச ஒருவிதத் தயக்கம் இருக்கலாம்.
அந்தத் தயக்கத்தைப் போக்க ஒரு புதிய ஏற்பாடு.
ஆண்கள் உடல் நலன், பாலியல் நலன், மன நலன் ஆகியவற்றைப் பற்றி வெளிப்படையாகப் பேசும் தளமாக இது அமைந்தது.
நிகழ்ச்சியில் வெஸ்ட் கோஸ்ட் - ஜூரோங் வெஸ்ட் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஹமீது ரசாக் கலந்துகொண்டார்.
"எந்த ஒரு கூச்சமும் இல்லாமல் பயமும் இல்லாமல் ஆண்கள், இளையர்களிலிருந்து முதியவர்கள்வரை, அவர்களுக்குத் தேவையானத் தகவல்களைக் கற்றுக்கொள்கிறார்கள். ஐயங்களைத் தீர்த்துக்கொள்கிறார்கள். அந்த வகையில் இம்மாதிரியான நிகழ்ச்சிகள் இன்னும் அதிகமாக நடக்கவேண்டும் வேண்டும் என்பது என்னுடைய அவா," என்று திரு ரசாக் குறிப்பிட்டார்.
இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் நிபுணர் குழு கலந்துரையாடலும் சிறு குழுக்கலந்துரையாடல்களும் இடம்பெற்றன.
அதன்மூலம் அடுத்த ஆண்டில் ஆண்களின் சுகாதாரத்தை இலக்காகக் கொண்ட விரிவான தொடர் உருவாக்கப்படும்.
மக்கள் கழக மலாய் நற்பணிச் செயற்குழு, சிங்கப்பூர் இஸ்லாமியச் சமய மன்றம், மெண்டாக்கி (Mendaki) ஆகியவற்றின் ஏற்பாட்டில் நிகழ்ச்சி நடைபெற்றது.

ஆதாரம் : Others