Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

புதிய ஓமக்ரான் ரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை: ஓங் யீ காங்

வாசிப்புநேரம் -

புதிய ஓமக்ரான் ரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை என்று சுகாதார அமைச்சர் ஓங் யீ காங் தெரிவித்துள்ளார்.

COVID-19ஐ ஏற்படுத்தக்கூடிய கிருமி உருமாறிக்கொண்டே இருக்கும் என்பது தெரிந்ததுதான் என்று அவர் கூறினார்.

BA.4, BA.5 ஆகிய ஓமக்ரான் ரகங்கள் BA.1, BA.2வை விட அதிகம் பரவக்கூடியவை.

அதனால் BA.4, BA.5 வகைக் கிருமிகள் ஐரோப்பிய நோய்க் கட்டுப்பாட்டு, தடுப்பு நிலையத்தின் கண்காணிப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ஓங் குறிப்பிட்டார்.

ஆனால் அவை கடுமையான பாதிப்பை ஏற்படுத்தக்கூடியவை என்பதற்கான ஆதாரம் ஏதும் இதுவரை இல்லை என்று அவர் சொன்னார்.

-CNA/CL(mi)

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்