Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

முதுமை மறதியால் பாதிக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கு நீண்டகால ஆதரவு

வாசிப்புநேரம் -
முதுமை மறதியால் பாதிக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கு நீண்டகால ஆதரவு
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

முதுமை மறதியால் பாதிக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கு நீண்டகால ஆதரவு வழங்கப் புதிய திட்டம் தொடங்கப்படுகிறது.

PDS+ திட்டம் தேவை அதிகரிக்கும்போது முன்கூட்டியே வீட்டுப் பராமரிப்பு, நோயாளிகளுக்கான கவனிப்பு ஆகியவற்றை Dementia Singapore அமைப்பு வழங்கும்.

முதுமை மறதியால் பாதிக்கப்பட்டிருக்கும் 280க்கு மேற்பட்டவர்களும் அவர்களின் குடும்பத்தினரும் அடுத்த ஈராண்டுகளில் புதிய திட்டத்தால் பயனடைவார்கள்.

பிரச்சினையின் அறிகுறிகளையும் நடத்தை மாற்றங்களையும் கையாள உதவி வழங்கப்படும்.

வீட்டை அவர்களுக்குப் பாதுகாப்பானதாக மாற்றவும் எதிர்காலப் பராமரிப்பைத் திட்டமிடவும் உதவி கிடைக்கும்.

அதற்கான சிறப்புக் குழு ஓராண்டு வரை வீட்டிலேயே குடும்பங்களுக்கு ஆதரவு வழங்கும்.

தேவைப்பட்டால் இந்தக் காலம் நீட்டிக்கப்படும்.

முதுமை மறதிக்கு ஆரம்பக் கட்டத்திலிருந்தே பராமரிப்பை வழங்கலாம்.

இது அவர்களின் கண்ணியத்தையும் வாழ்க்கைத் தரத்தையும் பாதுகாக்க உதவும்.

அவர்களுடைய குடும்பங்களுக்கும் இது ஆதரவாக இருக்கும்.
ஆதாரம் : Mediacorp Seithi

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்