Skip to main content
கடலுணவுகளின் தரத்தை உயர்த்த உதவும் புதிய ஆய்வு நிலையம்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

கடலுணவுகளின் தரத்தை உயர்த்த உதவும் புதிய ஆய்வு நிலையம்

வாசிப்புநேரம் -

உள்ளூர்க் கடலுணவுப் பண்ணைகள் மேலும் ஆரோக்கியமான தீனியை உருவாக்கிச் சோதிக்கப் புதிய ஆய்வு, மேம்பாட்டு நிலையம் அமைக்கப்படவிருக்கிறது.

The Feed and Feed Ingredient Technology Centre (F2TC) என்று அழைக்கப்படும் நிலையம் வெப்பமண்டலக் கடல் உயிரினத்துக்கான உணவில் கவனம் செலுத்தும்.

சிங்கப்பூரிலும் இந்த வட்டாரத்திலும் உள்ள பண்ணைகளுக்கு நிலையம் பயனளிக்கும் என்று நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற மூத்த துணையமைச்சர் ஜனில் புதுச்சேரி தெரிவித்தார்.

ஆய்வு நிலையத்தை சிங்கப்பூர் உணவு அமைப்பும் சிங்கப்பூர்த் தொழில்நுட்பப் பல்கலைக்கழகமும் இணைந்து வழிநடத்தும்.

திலாப்பியா மீன்களைப் பண்ணைகளில் வளர்க்கும் AquaPolis எனும் உள்ளூர்த் திட்டத்துக்குக் கூடுதலாக 6.3 மில்லியன் வெள்ளி வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

அந்த வகை மீனின் ருசியையும் தரத்தையும் மெருகேற்றத் திட்டம் உதவுகிறது.

ஆதாரம் : Mediacorp Seithi

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்