Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

வெப்பமான வானிலையால் சிங்கப்பூரின் பொருளியல் பாதிக்கப்படலாம்: ஆய்வுத் தகவல்

வாசிப்புநேரம் -
வெப்பமான வானிலையால் சிங்கப்பூரின் பொருளியல் பாதிக்கப்படலாம்: ஆய்வுத் தகவல்

(படம்: Raj Nadarajan/TODAY)

சிங்கப்பூரின் பொருளியலுக்கு வெப்பமான வானிலையால் பெரும் பாதிப்பு ஏற்படலாம் என்று புதிய ஆராய்ச்சி ஒன்றில் தெரியவந்துள்ளது.

2035க்குள் 2.2 பில்லியன் வெள்ளி இழப்பு நேரக்கூடும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

42 தொழில்துறைகளில், Project HeatSafe என்ற பெரிய அளவிலான கருத்தாய்வு மேற்கொள்ளப்பட்டது. வெப்பத்தால் ஏற்படக்கூடிய உளைச்சல் மக்களையும் தொழில்துறையையும் எவ்வாறு பாதிக்கிறது என்பது ஆராயப்பட்டது.

கடும் வெப்பத்துக்கு ஊழியர்கள் உட்படுத்தப்படும்போது பொருளியல் ரீதியில் இழப்புகள் கணிசமாக அதிகரிக்கும் என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

சூடான ஒவ்வொரு நாளுக்கும் ஓர் ஊழியருக்கு 21 வெள்ளி இழப்பு ஏற்படும் என்று முன்னுரைக்கப்பட்டுள்ளது.

அத்துடன், வெப்பமான வானிலை உடலிலுள்ள சமநிலையைக் குறைப்பதாகவும் ஆய்வு காட்டுகிறது.

முடிவெடுக்கும் திறன் 32 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் பாதிக்கப்படுகிறது.

NUS யோங் லூ லின் (Yong Loo Lin) மருத்துவப் பள்ளியின் வெப்ப மீள்திறன், செயல்திறன் நிலையம் இந்த ஆராய்ச்சியை நடத்தியது.

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்