உடல்பிடிப்பு நிலையங்களுக்குப் புதிய விதிமுறை - டிசம்பர் 1 முதல்
படம்: CNA/Raydza Rahman
This audio is generated by an AI tool.
சிங்கப்பூரில் உடல்பிடிப்பு நிலையங்களுக்கான புதிய விதிமுறைகள் அடுத்த மாதம் முதல் நடப்புக்கு வருகின்றன.
திறந்த அமைப்பில் செயல்படும் உடல்பிடிப்பு நிலையங்களும் இனி உரிமம் பெறவேண்டும்.
ஏற்கனவே செயல்படும் அத்தகைய உடல்பிடிப்பு நிலையங்கள் புதிய விதிமுறைகளுக்கு மாற ஓராண்டு அவகாசம் வழங்கப்படும்.
அடுத்த ஆண்டு நவம்பர் 30ஆம் தேதிக்குள் உடல்பிடிப்பு நிலையங்கள் புதிய உரிமத்தைப் பெறவேண்டும்.
அனைத்து உடல்பிடிப்பு நிலையங்களும் உரிம விவரங்கள் அடங்கிய காவல்துறைச் சுவரொட்டியை முகப்பில் காட்சிக்கு வைக்க வேண்டும்.
திறந்த அமைப்பிலான நிலையங்கள் புதிய விதிமுறைகளுக்கு உட்பட வேண்டும்.
சேவைகள் வழங்கப்படுவதை உள்ளிருந்தும் வெளியிலிருந்தும் பொதுமக்கள் எந்நேரமும் தடையின்றிப் பார்க்கக்கூடிய வகையில் அவை அமைந்திருக்கவேண்டும்.
உடல்பிடிப்பு நிலையங்களில் சட்டவிரோத நடவடிக்கைகள் அதிகரித்ததைத் தொடர்ந்து விதிமுறைகள் கடுமையாக்கப்படுகின்றன.