Skip to main content
அனுமதிக்கப்படாத அதிர்வலைகளைப் பயன்படுத்திய Simba
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

அனுமதிக்கப்படாத அதிர்வலைகளைப் பயன்படுத்திய Simba - விசாரணை

வாசிப்புநேரம் -
அனுமதிக்கப்படாத அதிர்வலைகளைப் பயன்படுத்திய Simba - விசாரணை

படம்: CNA/Alyssa Tan

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

தொலைத்தொடர்புச் சேவைகள் வழங்கும் நிறுவனங்கள் அனுமதிக்கப்படாத அதிர்வலைகளைப் பயன்படுத்தாமல் தடுப்பதையொட்டி நாடாளுமன்றத்தில் பேசப்பட்டது.

சிம்பா நிறுவனம், அனுமதிக்கப்படாத அதிர்வலைகளைப் பயன்படுத்தித் தொலைத்தொடர்புச் சேவை வழங்கியது குறித்துக் கேள்விகள் எழுப்பப்பட்டன.

தகவல் தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையம், சிம்பா நிறுவனத்திடம் விசாரணை நடத்தியதாகத் தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சர் ஜோசஃபின் தியோ (Josephine Teo) தெரிவித்தார்.

சிம்பா நிறுவனம் விதிகளை மீறாமல் இருக்க ஆணையம் தொடர்ந்து கண்காணிக்கும் என்றும் அவர் சொன்னார்.

தொலைத்தொடர்புச் சேவை நிறுவனங்கள் தங்களுக்கு அனுமதிக்கப்பட்ட அதிர்வலைகளை மட்டும் பயன்படுத்த வேண்டும்.

தகவல் தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையத்தின் அனுமதியின்றி நிறுவனங்கள் ஒதுக்கப்படாத அதிர்வலைகளைப் பயன்படுத்தினால் தீவிரமாகத் தண்டிக்கப்படலாம் என்றார் திருவாட்டி தியோ.

அது மற்ற சேவைகளுக்கு இடையூறு ஏற்படுத்தலாம்; நியாயமற்ற முறையில் மற்ற நிறுவனங்களைவிட முன்னேறிச் செல்ல அது வழிவகுக்கலாம் என்றார் அவர்.
ஆதாரம் : Mediacorp Seithi

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்