Skip to main content
சிங்கப்பூர் இந்திய நுண்கலைக் கழகத்தின் புதிய வளாகம்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

சிங்கப்பூர் இந்திய நுண்கலைக் கழகத்தின் புதிய வளாகம் - பிரதமர் திறந்துவைத்தார்

வாசிப்புநேரம் -
சிங்கப்பூர் இந்திய நுண்கலைக் கழகத்தின் புதிய வளாகம் - பிரதமர் திறந்துவைத்தார்

படம்: சவுரியம்மாள் ராயப்பன்

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

77 ஆண்டுகால வரலாற்றைக் கொண்ட சிங்கப்பூர் இந்திய நுண்கலைக் கழகத்தின் (SIFAS) புதிய வளாகம் இன்று மிடில் ரோட்டில் (Middle Road) திறப்பு விழா கண்டது.

புதிய வளாகத்தைப் பிரதமர் லாரன்ஸ் வோங் அதிகாரபூர்வமாகத் திறந்துவைத்தார்.

1949ஆம் ஆண்டு 12 உறுப்பினர்களால் தொடங்கப்பட்ட கழகம், இந்தியப் பாரம்பரிய இசை, நடனம், ஓவியம் உள்ளிட்ட நுண்கலைகளைக் கற்பித்து வருகிறது.

புதிய வளாகம் பிராஸ் பாசா–பூகிஸ் கலை, மரபுடைமை வட்டாரத்தில் அமைந்துள்ளது.
Related article image
படம்: நந்தினி அழகப்பன்
பழைமையைப் பாதுகாக்கும் புதிய வளாகம்

மரபுடைமைக் கட்டடத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க அம்சங்களைப் பாதுகாத்து, அது நவீனக் கலைப் பயிற்சி வளாகமாக மாற்றப்பட்டுள்ளது.

இசை, நடனப் பயிற்சி அறைகள், ஒத்திகைக்கான இடங்கள், ஓவியக்கலைப் பயிற்சி வசதிகள், பல்நோக்குப் பயிற்சி அரங்கு ஆகியவை அங்கு இடம்பெற்றுள்ளன.

கலைப் பயிற்சிகளுக்கு ஏற்ற தளவாடங்கள், பொருள்களைச் சேமிக்கும் வசதிகள், ஆசிரியர்கள் தங்குவதற்கான இடங்களும் உள்ளன.

வெளிப்புற நிகழ்ச்சிகளுக்காகச் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட அரங்கமும் அமைக்கப்பட்டுள்ளது.
Related article image
படம்: நந்தினி அழகப்பன்
கலைஞர்களுக்குப் புதிய வாய்ப்புகளை வழங்கும் SIFAS–Bothra அரங்கம்

புதிய வளாகத்தில் SIFAS–Bothra அரங்கமும் திறக்கப்பட்டுள்ளது.

நவீன ஒலி, ஒளி வசதிகளைக் கொண்ட அரங்கில் இசை, நடன நிகழ்ச்சிகள், தொழில்முறைக் கலைப்படைப்புகள், மாணவர்களின் நிகழ்ச்சிகள் ஆகியவை இடம்பெறும்.
Related article image
படம்: நந்தினி அழகப்பன்
இந்திய நுண்கலைகளில் ஆர்வம் காட்டும் பல இன மாணவர்கள்

சிங்கப்பூர் இந்திய நுண்கலைக் கழகத்தில் தற்போது 1,665 மாணவர்கள் பயில்கின்றனர். கழகத்தில் 1,904 உறுப்பினர்கள் உள்ளனர்.

கர்நாடக இசை, இந்துஸ்தானி இசை, பரதநாட்டியம், கதக், குச்சிப்புடி, ஓவியக்கலை உள்ளிட்ட 18 கலைப் பிரிவுகளில் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.

இந்தியாவைச் சேர்ந்த 24 முழுநேர ஆசிரியர்களும் மூன்று பகுதிநேர ஆசிரியர்களும் பணியாற்றுகின்றனர்.
Related article image
படம்: நந்தினி அழகப்பன்
திறப்பு விழாவையொட்டிப் பிரதமர் வோங் இசை, நடன, ஓவியக்கலைப் பயிற்சி அறைகளைப் பார்வையிட்டார்.

மாணவர்கள் பரதம், கதக் நடனங்களை ஆடியதோடு மிருதங்கம், தபேலா, சித்தார், வீணை, வயலின் உள்ளிட்ட இசைக்கருவிகளையும் அவருக்கு வாசித்துக் காட்டினர்.

மாணவர்களின் ஓவியப் படைப்புகளும் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.

திறப்பு விழாவில் 'Sounds of Harmony' என்ற தலைப்பில் 12 நிமிடச் சிறப்புக் கலை நிகழ்ச்சியும் இடம்பெற்றது.
ஆதாரம் : Mediacorp Seithi

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்