இணையத்தால் ஏற்படும் தீமைகளை விரைவில் நிறுத்த உதவும் புதிய அரசாங்க அமைப்பு
வாசிப்புநேரம் -
சிங்கப்பூரில் இணையத்தால் ஏற்படும் தீமைகளை உடனடியாக நிறுத்த உதவும் நோக்கத்துடன் புதிய அரசாங்க அமைப்பு ஒன்று நிறுவப்பட்டுள்ளது.
வழக்கமான நீதிமன்ற நடைமுறைகளை மட்டும் சார்ந்திருக்காமல் இருக்க அது துணைபுரியும்.
இணைய மிரட்டல்கள், ஒப்புதலின்றி அந்தரங்கப் படங்கள் பகிரப்படுவது முதலிய பிரச்சினைகளைச் சந்திப்போர் அமைப்பின் உதவியை நாடலாம்.
இணையச் சேவையை வழங்கும் நிறுவனங்கள், சமூக ஊடகத் தளங்களிடம் உடனே நடவடிக்கை எடுக்கும்படி அரசாங்க அமைப்பு உத்தரவிடும்.
பொங்கோல் மின்னிலக்க வட்டாரத்தில் அறிவார்ந்த தேசம் 2.0 திட்டத்தைத் தொடங்கிவைத்தபோது பிரதமர் லாரன்ஸ் வோங், பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவான, சிறந்த ஆதரவை வழங்குவதே குறிக்கோள் என்று சொன்னார்.
தற்போது பாதிக்கப்பட்டவர்கள் காவல்துறையிடம் புகார் கொடுக்கலாம், நீதிமன்றத்திடம் பாதுகாப்பு உத்தரவுக்கு விண்ணப்பிக்கலாம். ஆனால் இவற்றுக்கு நேரம் எடுக்கும்.
இணையச் சேவையை வழங்கும் நிறுவனங்களிடம் உதவி கேட்பது எப்படி என்று தெரியாமல் பலர் தவிக்கலாம்.
அதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவப் புதிய அமைப்பு நிறுவப்படுகிறது என்றார் பிரதமர்.

ஆதாரம் : CNA