சிங்கப்பூரில் முதல் கலைத்துறைப் பல்கலைக்கழகம் அமைக்கப்படும்
சிங்கப்பூரில், முதன்முறையாகக் கலைத்துறைக்கென பல்கலைக்கழகம் அமைக்கப்படவுள்ளது.

(படம்: Google Street View)
சிங்கப்பூரில், முதன்முறையாகக் கலைத்துறைக்கென பல்கலைக்கழகம் அமைக்கப்படவுள்ளது.
நன்யாங் நுண்கலைக் கழகம், Lasalle கலைக்கல்லூரி ஆகியவற்றின் கூட்டணியில் அது அமையும் என்று கல்வி அமைச்சர் லாரன்ஸ் வோங் தமது அமைச்சுக்கான செலவின ஒதுக்கீட்டு உரையின்போது அறிவித்தார்.
வெவ்வேறு கல்விப் பாதைகளை வழங்கி, பலதரப்பட்ட திறன்களைப் பேணுவதில் அமைச்சு வலுவான நம்பிக்கை கொண்டுள்ளதாக அவர் கூறினார்.
அடுத்த மூன்று, நான்கு ஆண்டுகளுக்குள் பல்கலைக்கழகம் அமைக்கப்படும்.
அதன் கட்டமைப்பை உருவாக்க, செயற்குழு ஒன்றைக் கல்வி அமைச்சு நியமிக்கும்.