Skip to main content
புதிய விலங்குநல மருத்துவ மன்றம்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

புதிய விலங்குநல மருத்துவ மன்றம் - இவ்வாண்டுப் பிற்பாதியில்

வாசிப்புநேரம் -
புதிய விலங்குநல மருத்துவ மன்றம் - இவ்வாண்டுப் பிற்பாதியில்

படம்: Envato Elements

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

சிங்கப்பூரில் விலங்குநல மருத்துவ மன்றம் அமைக்கப்படவிருக்கிறது.

விலங்குநல மருத்துவத் தரத்தை அதிகரிப்பது, அந்தத் துறையை நிர்வகிப்பது ஆகியவை தொடர்பான மசோதா நாடாளுமன்றத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

கடந்த 20 ஆண்டுகளாக விலங்குநல மருத்துவர்களின் எண்ணிக்கை 5 மடங்குக்கும் மேலாகக் கூடியிருப்பதைத் தேசிய வளர்ச்சித் துணையமைச்சர் ஆல்வின் டான் சுட்டினார்.

2024ஆம் ஆண்டு நிலவரப்படி கிட்டத்தட்ட 700 விலங்குநல மருத்துவர்கள் சிங்கப்பூரில் இருப்பதாக அவர் தெரிவித்தார்.

விலங்குநல மருத்துவச் சேவைகளும் வெகுவாகக் கூடியிருப்பதாகத் திரு டான் கூறினார்.

புதிய மன்றம் இவ்வாண்டுப் பிற்பாதியில் செயல்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அது மருத்துவர்களின் தொழில்முறை நடத்தைக்கு விதிகளை வகுக்கும்.  மருத்துவர்கள் தவறாக அல்லது கவனக்குறைவாய்  நடந்துகொண்டதாகப் புகார் பதிவுசெய்யப்பட்டால் மன்றம் அதை விசாரிக்கும்.

ஆதாரம் : Mediacorp Seithi

மேலும் செய்திகள் கட்டுரைகள்