Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

பச்சிளங்குழந்தைகளிடம் மஞ்சள் காமாலையைக் கண்டறியும் புதிய செயலி

வாசிப்புநேரம் -

பச்சிளங்குழந்தைகளுக்கு ஏற்படக்கூடிய மஞ்சள் காமாலையை வீட்டிலேயே பரிசோதனை செய்யப் பெற்றோருக்குப் புதிய செயலி அறிமுகமாகவிருக்கிறது.

சிங்ஹெல்த் (SingHealth) பலதுறை மருந்தகங்கள், சிங்கப்பூர்ப் பொது மருத்துவமனை, Synapxe எனும் சுகாதாரத் தொழில்நுட்ப அமைப்பு இணைந்து அதனை உருவாக்கின.

பிறக்கும் ஐந்து குழந்தைகளில் மூன்றுக்கு மஞ்சள் காமாலை ஏற்படுகிறது.

குறைப்பிரசவத்தில் பிறக்கும் ஐந்தில் நான்கு பிள்ளைகளும் அதனால் பாதிக்கப்படுகின்றன.

மூளை, வளர்ச்சிப் பிரச்சினைகளைத் தவிர்க்க மஞ்சள் காமாலையை முன்கூட்டியே கண்டறிவது மிக முக்கியம்.

அதனைக் கண்டறிந்து சிகிச்சை வழங்க, சிசுக்களை மருத்துவரிடம் சென்று காட்டவேண்டும்.

அதற்கு நேரமும் பணமும் செலவாகும்.

கைக்குழந்தையை வெளியில் அழைத்துச் செல்லும்போது அதற்கு மற்ற நோய்கள் பரவக்கூடிய அபாயமும் உண்டு.

அதற்கெல்லாம் தீர்வாக வரக்கூடியது இந்தச் செயலி.

ஆசிய மக்களின் தோல் நிறங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட புதிய செயலி பெற்றோருக்கு உதவக்கூடும்.

செயலியைக் கொண்டு சுமார் 550 சிசுக்களுக்குப் பரிசோதனை செய்யப்பட்டது.

பிள்ளைகளுக்கு இருக்கும் மஞ்சள் காமாலை பிரச்சினைகளைத் தெளிவாக அது காட்டியது.

முன்னோட்டமாக, அடுத்த 1.5 ஆண்டில் குறைந்தது 2,000 பச்சிளங்குழந்தைகளுக்குச் செயலியைக் கொண்டு பரிசோதனை செய்யப்படும்.

ஆதாரம் : CNA

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்