ஜூரோங் தொழிற்பேட்டையில் நெய்தல் ரோடு அமைந்துள்ளது.
1968ஆம் ஆண்டு அங்கு Singapore Textile Industry Ltd ஆகப் பெரிய ஆலைகளில் ஒன்றாகத் திகழ்ந்தது.
ஜவுளித் தொழில் அங்கே பரவலாக இருந்ததால் அந்தச் சாலைக்கு முதலில் நெசவு ரோடு என்று பெயர் சூட்டப்பட்டது.
ஆனால் பலரும் 'நெசவு' என்ற சொல்லை உச்சரிக்கச் சிரமப்பட்டதால் அந்தச் சாலை 'நெய்தல் ரோடு' எனப் பெயர் மாற்றம் கண்டது.
தற்போது நெய்தல் ரோடு உள்ள பகுதியில் பல்வேறு பொருள்களை உற்பத்தி செய்யும் ஆலைகள் அமைந்துள்ளன.