ஓட்டுநரில்லா இலவசத் தானியக்கப் பேருந்துச் சேவை... நீ ஆன் பலதுறைத் தொழிற்கல்லூரியில்

(படம்:Ngee Ann Polytechnic இணையத்தளம்)
நீ ஆன் பலதுறைத் தொழிற்கல்லூரியில் இலவசமாக ஓட்டுநரில்லாத் தானியக்கப் பேருந்துச் சேவை அறிமுகம் கண்டுள்ளது.
கல்லூரி வளாகத்திலும், King Albert Park MRT நிலையத்துக்கும் கல்லூரிக்கும் இடையிலும் அது சேவை வழங்கும்.
நீ ஆன் பலதுறைத் தொழிற்கல்லூரி மாணவர்களும் ஊழியர்களும் இலவசமாக ஓராண்டு அந்தச் சேவையைப் பயன்படுத்தலாம்.
சிங்கப்பூரின் MooVita நிறுவனமும் பலதுறைத் தொழிற்கல்லூரியும் செய்துகொண்ட பங்காளித்துவ உடன்பாட்டின்கீழ் அது சாத்தியமானது.
கடந்த சில ஆண்டுகளாக MooVita நிறுவனம் நீ ஆன் பலதுறைத் தொழிற்கல்லூரி வளாகத்தின் சாலைகளை ஆய்வு, சோதனை நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தியது.
அதற்காக ஓட்டுநரில்லா இலவசப் பேருந்துச் சேவையை அது வழங்கியுள்ளது.