சிங்கப்பூரில் அடையாள அட்டை, கடப்பிதழ் பெற முன்பதிவு தேவையிருக்காது...விரைவில்
வாசிப்புநேரம் -
(கோப்புப் படம்: ICA)
சிங்கப்பூரில் விரைவில் அடையாள அட்டை அல்லது கடப்பிதழைப் பெற்றுக்கொள்ள முன்பதிவு செய்ய வேண்டியிருக்காது.
அடுத்த ஆண்டு குடிநுழைவு சோதனைச் சாவடிகள் ஆணையத்தின் (Immigration Checkpoints Authority) புதிய சேவைகள் நிலையம் (ISC) திறக்கப்படும்போது சொந்தமாக அவற்றைப் பெற்றுக் கொள்ளும் முறை அறிமுகமாகும்.
ஆணையத்தின் வருடாந்திர வேலைத்திட்டக் கருத்தரங்கில் இன்று அந்த விவரம் தரப்பட்டது.
iSmart எனும் ஒருங்கிணைக்கப்பட்ட அறிவார்ந்த தகவல் நிர்வாக முறையில் இயந்திரம் தகவலைப் பெற்று, பத்திரங்களை வழங்கும்.
அடையாள அட்டை, கடப்பிதழ் ஆகியவற்றுக்கு விண்ணப்பம் செய்வதையும் பெற்றுக்கொள்வதையும் சுலபமாக்க ஆணையம் விரும்புகிறது.
ஆணையத்தின் பல சேவை நிலையங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு ISC ஒரே நிலையமாகச் செயல்படும்.
புதிய நிலையம் குறித்து 2019இல் அறிவிக்கப்பட்டது. 10 மாடிக் கட்டடமான அது தற்போதுள்ள ICA கட்டடத்துக்கு அடுத்து அமைந்திருக்கும்.
ஆணையத்தின் 95 விழுக்காட்டுச் சேவைகள் மின்னலக்கமயமாகிவிட்டன.
சுமார் 95 விழுக்காட்டு வாடிக்கையாளர்கள் இணையம் வழி விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கின்றனர்.
பொதுமக்கள் மின்னலக்க ஆவணங்களை
MyICA செயலி, MyICA e-service இணையப்பக்கம் அல்லது FileSG by GovTech தளத்தில் பெறலாம்.