Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

நீக்குப்போக்கான வேலை நடைமுறையைப் பின்பற்றும் ஊழியர்களின் சம்பளம் குறைக்கப்படுமா?

வாசிப்புநேரம் -
நீக்குப்போக்கான வேலை நடைமுறையைப் பின்பற்றும் ஊழியர்களின் வேலை எவ்விதத்திலும் பாதிக்கப்படாமல் இருந்தால் முதலாளிகள் அவர்களது சம்பளத்தைக் குறைக்க அடிப்படை எதுவும் இல்லை.

கல்வி, மனிதவளத் துணையமைச்சர் கான் சியாவ் ஹுவாங் (Gan Siow Huang) இன்று (7 மே) நாடாளுமன்றத்தில் அதனைத் தெரிவித்தார்.

ஊழியர் ஒருவர் குறைவான நாள்கள் வேலை செய்வதால் அவரது சம்பளம் குறைக்கப்படுமா என்று நாடாளுமன்ற நியமன உறுப்பினர் ராஜ் தாமஸ் (Joshua Thomas) கேள்வி எழுப்பினார்.

அதற்குத் திருமதி கான் பதில் சொன்னார்.

நீக்குப்போக்கான வேலை ஏற்பாடுகள் தொடர்பான முத்தரப்பு வழிகாட்டி விதிமுறைகள் இவ்வாண்டு (2024) டிசம்பர் முதல் தேதி முதல் நடப்புக்கு வரும்.

நீக்குப்போக்கான வேலை ஏற்பாடுகளை ஒட்டி மனிதவள அமைச்சர் டான் சீ லெங் (Tan See Leng) பேசியிருந்தார்.

"அடுத்த தலைமுறை ஊழியரணியின் எதிர்காலம் சிறப்பாக அமைய அனைவரும் ஒன்றிணைந்த சமுதாயமாகச் செய்லபடவேண்டும்," என்றார் அவர்.
ஆதாரம் : CNA

மேலும் செய்திகள் கட்டுரைகள்