Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

கட்டுப்படுத்தப்பட்ட இடங்களுக்குள் நுழைய முன்னாள் குற்றவாளிகளுக்குத் தடையில்லை - அமைச்சர் கா. சண்முகம்

வாசிப்புநேரம் -

சிங்கப்பூரில் கட்டுப்படுத்தப்பட்ட இடங்களுக்குள் நுழைய முன்னாள் குற்றவாளிகளுக்குத் தடையில்லை.

இருப்பினும் முன்னாள் குற்றங்கள் கருத்தில் கொள்ளப்படலாம்.

பட்டாளிக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் லியோன் பெரேரா நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்குச் சட்ட, உள்துறை அமைச்சர் கா சண்முகம் அவ்வாறு பதிலளித்தார்.

அத்தகையோர் ஜூரோங் தீவு, சாங்கி விமான நிலையம் போன்ற இடங்களுக்குள் நுழைவதற்கோ வேலையில் அமர்த்தப்படுவதற்கோ அனுமதி உண்டா என்று திரு. பெரேரா கேள்வி எழுப்பியிருந்தார்.  

முன்னாள் குற்றவாளிகள் நியாயமான வேலைவாய்ப்புகளைப் பெறுவதற்கு மஞ்சள் நாடா சிங்கப்பூர் அமைப்பு உதவி வருவதை அமைச்சர் சண்முகம் சுட்டினார்.

முதலாளிகளுடனும் தொழில் அமைப்புகளுடனும் அது நெருக்கமாய்ப் பணியாற்றுகிறது என்று அவர் சொன்னார்.

பாட்டாளிக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஜேமஸ் லிம்மும் கடந்த ஆண்டு அதேபோன்ற கேள்விகளை எழுப்பியிருந்ததாகத் திரு சண்முகம் கூறினார்.

அவர்கள் இருவரும் எதனைக் குறிப்பிட்டு அத்தகைய கேள்விகளை எழுப்பியுள்ளனர் என்பது தெளிவாகத் தெரியவில்லை என்றார் அமைச்சர். 

முன்னாள் குற்றவாளிகள் பிள்ளைப் பராமரிப்பு நிலையங்களிலோ கூட்டுரிமை வீடுகளில் பாதுகாவல் அதிகாரிகளாகவோ பணியமர்த்தப்படுவதை நீங்கள் விரும்புவீர்களா என்று தாம் வினவியதைத் திரு சண்முகம் சுட்டினார்.

நாடாளுமன்றத்தில் தகவல்களைத் தெளிவாகவும் கவனமாகவும் முன்வைக்குமாறு அவர் உறுப்பினர்களைக் கேட்டுக்கொண்டார்.

செய்தி செயலி பல்வேறு புதிய அம்சங்களுடன் புதுப்பொலிவு பெற்றுள்ளது.  இப்போதே ‘Update’ செய்யுங்கள் அல்லது ‘Mediacorp Seithi’ செயலியைப் பதிவிறக்கம் செய்யுங்கள்! 

ஆதாரம் : CNA

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்