Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

செந்தோசாவில் முதலை தென்படவில்லை; நீர் விளையாட்டுகளுக்கு அனுமதி

வாசிப்புநேரம் -
செந்தோசாவில் முதலை தென்படவில்லை; நீர் விளையாட்டுகளுக்கு அனுமதி
கோப்புப்படம்: CNA/Raydza Rahman
செந்தோசாவில் நீர் விளையாட்டுகளை மேற்கொள்ள விதிக்கப்பட்டிருந்த தற்காலிகத் தடை மீட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறது.

கடந்த மாதம் 31ஆம் தேதி செந்தோசா கோவ் கடல்பகுதியில் முதலை தென்பட்டதாகத் தகவல் கிடைத்தது.

அதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீர் விளையாட்டுகள் நிறுத்திவைக்கப்பட்டன.

சிலோசோ, பாலாவான், தஞ்சோங் ஆகிய கடற்கரைகளில் நீச்சல், படகோட்டம் (kayaking) உள்ளிட்ட நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்கப்பட்டது.

செந்தோசா மேம்பாட்டுக் கழகம் தினமும் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டது.

ஒரு வாரம் கடந்துவிட்ட நிலையில் அங்கு மீண்டும் முதலை தென்படவில்லை.

ஆனாலும் கடலுக்குச் செல்வோர் பாதுகாப்பு அறிவுரைகளைப் பின்பற்றுமாறு வலியுறுத்தப்படுகின்றனர்.

ஒருவேளை முதலை தென்பட்டால் உடனடியாக தேசியப் பூங்காக் கழகத்திடம் தெரிவிக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
ஆதாரம் : Mediacorp Seithi

மேலும் செய்திகள் கட்டுரைகள்