Skip to main content
சிங்கப்பூர்க் கரைகளில் எண்ணெய்ப் படலம் தென்படவில்லை
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

சிங்கப்பூர்க் கரைகளில் எண்ணெய்ப் படலம் தென்படவில்லை

வாசிப்புநேரம் -
சிங்கப்பூரின் நீர்ப் பகுதிகளிலும் கடற்கரைகளிலும் எண்ணெய்ப் படலம் எதுவும் தென்படவில்லை என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.

அதை முன்னிட்டு இன்றிலிருந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்தும் கைவிடப்படுகின்றன.

இம்மாதம் 20ஆம் தேதி புக்கோம் தீவுக்கு அருகிலிருந்த Shell குழாயிலிருந்து எண்ணெய் கசிந்ததில் கடற்பகுதி மாசடைந்தது.

கசிந்த எண்ணெய் தற்போது முழுமையாய் அகற்றப்பட்டுவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பாறைகளிலும் இதர உள்கட்டமைப்புகளிலும் படிந்திருந்த எண்ணெய்ப் படலமும் சுத்தம் செய்யப்பட்டுவிட்டது.

எண்ணெயைக் கட்டுப்படுத்தவும் உறிஞ்சவும் வைக்கப்பட்டுள்ள மிதவைகள் கட்டங்கட்டமாக அகற்றப்படும்.

புக்கோம் தீவில் எண்ணெய்க் கசிவு குறித்த விசாரணை தொடர்கிறது.

மேலும் செய்திகள் கட்டுரைகள்