Skip to main content
"முடியை அலச Shampooவா? சிகைக்காயா? வெறும் தண்ணீரா?"
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர் exclusive

"முடியை அலச Shampooவா? சிகைக்காயா? வெறும் தண்ணீரா?"

வாசிப்புநேரம் -

"தலைமுடிக்கு shampoo பயன்படுத்த வேண்டாம்" என்று கூறும் போக்கு சமூக ஊடகங்களில் அண்மைக் காலமாகப் பிரலபம் அடைந்துள்ளது.

Shampooஇல் உள்ள கடுமையான ரசாயனங்கள் முடியின் இயற்கை எண்ணெயை அகற்றுவதாக அவர்கள் கூறுகின்றனர். 

Shampooவுக்குப் பதிலாகத் தண்ணீர் அல்லது apple cider vinegar, baking soda போன்றவற்றைப் பயன்படுத்தலாம் என்று Tiktokஇல் சில காணொளிகள் கூறுகின்றன.

"Shampooவைத் தவிர்ப்பது எல்லா விதமான முடிக்கும் பொருந்தாது"

Shampooவை முழுமையாகத் தவிர்க்கவேண்டிய அவசியமில்லை என்றார் 'செய்தி'யிடம் பேசிய The Lifestyle Clinic எனும் அழகுப் பராமரிப்பு மருந்தகத்தின் மருத்துவ இயக்குநர் டாக்டர் கோமதி ராஜரத்தினம்.

Related article image

"சருமத்தில் எப்போதும் எண்ணெய் உருவாகும். எண்ணெயைத் தண்ணீரை வைத்து அகற்றமுடியாது. மற்ற பொருள்களைப் பயன்படுத்தினாலும் அது எல்லாச் சருமத்துக்கும் பொருந்தும் என்று சொல்லமுடியாது," என்றார் அவர். 

முக்கியமாக எண்ணெய் அதிகம் உருவாகும் சருமம் அல்லது எளிதில் பாதிக்கப்படக்கூடிய சருமம் உள்ளவர்களுக்கு அது பொருந்தாது என்று டாக்டர் கோமதி தெரிவித்தார்.

சிலர் தலைமுடியில் எண்ணெயையோ Gel எனப்படும் பசையையோ தடவுவதுண்டு. அவர்கள் Shampoo பயன்படுத்துவது அவசியம் என்கிறார் அவர். 

தலைமுடி ஒழுங்காகச் சுத்தம் செய்யப்படாதபோது முடி வளரக்கூடிய follicle எனும் துளையில் அழுக்கும் வியர்வையும் அடைந்துவிடும். இதனால் பொடுகு ஏற்படலாம்.

Related article image

அப்படி என்றால் Shampooஇல் உள்ள கடுமையான ரசாயனங்களை எப்படித் தவிர்ப்பது?

"Shampooவை அளவோடு பயன்படுத்தலாம்"


✅ Shampooஐ தினமும் பயன்படுத்தவேண்டும் என்ற அவசியமில்லை. வாரத்துக்கு ஒரு முறை அல்லது 2 முறை பயன்படுத்தலாம். தலைமுடி அதிகளவில் எண்ணெய்ப் பதம் கொண்டுள்ளது என்று உணர்ந்தால் முடியைக் கழுவலாம்.

✅ Shampooவை அடிக்கடி பயன்படுத்தும்போதும் பிரச்சினைகள் ஏற்படலாம். அது சருமத்தை உலரச்செய்யலாம். பொடுகும் ஏற்படலாம். 
 
Related article image

சிகைக்காய் சிறந்ததா?

முடிக்கு ரசாயனக் கலப்பு இல்லாத பொருள்களைப் பயன்படுத்துவது எப்போதும் சிறந்தது. 

இந்தியர்கள் பாரம்பரியமாகப் பயன்படுத்தும் நல்லெண்ணெய், சிகைக்காய் தூள் போன்றவை நல்ல பலன்களைக் கொண்டவை என்று டாக்டர் கோமதி சொன்னார்.

இருப்பினும் சிகைக்காயை வாங்கினால் அது இயற்கையாகத் தயாரிக்கப்பட்டதா, ரசாயனம் கலந்ததா என்பதையும் பார்த்துக்கொள்ள வேண்டும். 
 
உலர்ந்த சருமம், எண்ணெயான சருமம், எளிதில் பாதிக்கப்படக்கூடிய சருமம் என ஒவ்வொருவரின் சருமமும் வேறுபடும். 
அதற்கு ஏற்ற Shampooஐ அல்லது சிகைக்காய் போன்ற இயற்கையான பொருள்களை ஆராய்ந்து பார்த்துப் பயன்படுத்துவது சிறந்தது என்பது நிபுணர்களின் பொதுவான கருத்து.

ஆதாரம் : Mediacorp Seithi

மேலும் செய்திகள் கட்டுரைகள்