Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

இஸ்ரேலின் ஜெருசல வெடிகுண்டுத் தாக்குதலில் சிங்கப்பூரர் எவரும் பாதிக்கப்படவில்லை: வெளியுறவு அமைச்சு

வாசிப்புநேரம் -
இஸ்ரேலின் ஜெருசல வெடிகுண்டுத் தாக்குதலில் சிங்கப்பூரர் எவரும் பாதிக்கப்படவில்லை: வெளியுறவு அமைச்சு

(AP Photo / Hatem Moussa)

இஸ்ரேலின் ஜெருசலத்தில் நேற்று நடந்த வெடிகுண்டுத் தாக்குதல்களில் சிங்கப்பூரர் எவரும் பாதிக்கப்பட்டதாகத் தகவல் இல்லை என்று சிங்கப்பூரின் வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது. 

 இரண்டு பேருந்து நிலையங்களில் நடத்தப்பட்ட அந்தத் தாக்குதல்களில் குறைந்தது ஒருவர் கொல்லப்பட்டார். பலர் காயமுற்றனர். 

அமைச்சு, தாக்குதல்களை வன்மையாகக் கண்டித்தது. பொதுமக்களுக்கு எதிரான அத்தகைய தாக்குதல்களை நியாயப்படுத்த முடியாது என்று அது அறிக்கை-ஒன்றில் குறிப்பிட்டது. உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு அமைச்சு அனுதாபம் தெரிவித்தது. 

இஸ்ரேலில் இருக்கும் சிங்கப்பூரர்களைக் கவனத்துடன் இருக்குமாறு அது கேட்டுக்கொண்டது. உள்ளூர்ச் செய்திகளை அணுக்கமாகக் கண்காணிக்கும்படியும் அதிகாரிகளின் உத்தரவுகளைப் பின்பற்றும்படியும் அமைச்சு அவர்களுக்கு ஆலோசனை கூறியது.

இஸ்ரேலுக்குச் செல்லும் சிங்கப்பூரர்கள் அமைச்சுடன் பதிவுசெய்துகொள்ளும்படி அறிவுறுத்தப்படுகின்றனர். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்

Aa