சிங்கப்பூர் - வியட்நாம் காற்பந்து ஆட்டம் நடைபெறும் நாளில் நுழைவுச்சீட்டுகள் விற்கப்பட மாட்டா
ASEAN வெற்றியாளர் கிண்ணக் காற்பந்துப் போட்டியின் சிங்கப்பூருக்கும் வியட்நாமுக்கும் இடையிலான அரையிறுதி ஆட்டம் நடைபெறும் நாளில் நுழைவுச்சீட்டுகள் விற்கப்பட மாட்டா என்று சிங்கப்பூர்க் காற்பந்து சங்கம் கூறியுள்ளது.
வியட்நாமில் நடைபெறவுள்ள ஆட்டத்திற்கான சுமார் 300 நுழைவுச்சீட்டுகள் போட்டியன்று விற்கப்படுமென இதற்கு முன்னர் அது கூறியிருந்தது.
வியட்நாமிய காற்பந்துச் சம்மேளனத்தின் மூலம் அவை விநியோகிக்கப்படும் என்று சங்கம் அதன் Facebook பக்கத்தில் இன்று பதிவிட்டிருந்தது.
சிங்கப்பூரும் வியட்நாமும் சிங்கப்பூரில் சந்திக்கும் காற்பந்துப் போட்டிக்கான நுழைவுச்சீட்டு விற்பனை நேற்று முன் தினம் தொடங்கியது.
ஏறக்குறைய 6 மணி நேரத்தில் அவை விற்றுத் தீர்ந்தன.
24 வெள்ளியிலிருந்து 49 வெள்ளி வரை 3 பிரிவுகளில் நுழைவுச்சீட்டுகள் விற்கப்பட்டன.
அரையிறுதிப் போட்டியின் முதல் சுற்று நாளை மறுநாள் (26 டிசம்பர்) Jalan Besar அரங்கில் நடைபெறும்.
இரண்டாம் சுற்று வியட்நாமில் அதற்கு மூன்று நாளுக்குப் பிறகு இடம்பெறும்.