Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

குறைந்த வருமானம் ஈட்டும் குடும்பங்களைச் சேர்ந்த NUS மாணவர்களுக்குக் கூடுதல் நிதி ஆதரவு

வாசிப்புநேரம் -

சிங்கப்பூர்த் தேசியப் பல்கலைக்கழகத்தில் (NUS) பயிலும் குறைந்த வருமானம் ஈட்டும் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்குக் கூடுதல் நிதி ஆதரவு வழங்கப்படவுள்ளது.

பல்கலையில் முழுநேர பட்டப்படிப்பில் பயிலும் மாணவர்கள் கட்டணம் செலுத்தத் தேவையில்லை.

தனிநபர் வருமானம் 1,000 வெள்ளி வரை உள்ள குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு அது பொருந்தும்.

புதிய நடைமுறை இவ்வாண்டு ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கும்.

தனிநபர் வருமானம் 690 வெள்ளி வரை உள்ள குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு மேலும் அதிகமான ஆதரவு வழங்கப்படும்.

தினசரிச் செலவு, பல்கலை வளாகத்தில் வசிப்பது, வெளிநாட்டுக் கற்றல் திட்டங்களில் பங்கேற்பது போன்ற அம்சங்களில் ஆதரவு கொடுக்கப்படும் என்று கூறப்பட்டது.

தற்போது நடப்பில் உள்ள அரசாங்கக் கல்வி உதவிநிதியில் ஆண்டுதோறும் கூடுதலாக 15 மில்லியன் வெள்ளி நிரப்பப்படும் என்று பல்கலை நிர்வாகம் சொன்னது.

அது குறைந்த வருமானக் குடும்பங்களிலிருந்து வரும் சுமார் 3,300 மாணவர்களுக்கு உதவியாக இருக்கும். 

அதிக உதவி தேவைப்படும் மாணவர்களுக்குக் கிடைக்கக்கூடிய நிதி ஆதரவில் உள்ள இடைவெளிகளை நிரப்ப இந்தப் புதிய நடைமுறை வகைசெய்யும் என்று சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகம் சொன்னது.

செய்தி செயலி பல்வேறு புதிய அம்சங்களுடன் புதுப்பொலிவு பெற்றுள்ளது.  இப்போதே ‘Update’ செய்யுங்கள் அல்லது ‘Mediacorp Seithi’ செயலியைப் பதிவிறக்கம் செய்யுங்கள்! 

ஆதாரம் : CNA

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்