வடக்கு-தெற்கு ரயில் சேவை வழக்கநிலைக்குத் திரும்பியது
வடக்கு-தெற்கு ரயில் பாதையில் மரினா சௌத் பியர் நிலையத்துக்கும் பிஷான் நிலையத்துக்கும் இடையிலான சேவையில் இன்று (10 ஜனவரி) மாலை கோளாறு ஏற்பட்டது.
தற்போது கோளாறு சரிசெய்யப்பட்டுள்ளதாக SMRT நிறுவனம் Facebook தளத்தில் கூறியது.
கோளாறு குறித்து அது முதன்முதலில் மாலை 5.50 மணிக்குத் தெரிவித்தது.
அப்போது பயணிகள் 15 நிமிடத் தாமதத்தை எதிர்நோக்கலாம் என்று நிறுவனம் சொன்னது.
தாமதம் 20,25 நிமிடம் வரை ஆகலாம் என்று அது 6 மணியளவில் கூறியது.
இலவசப் பேருந்துச் சேவைகள் வழங்கப்படுவதாக நிறுவனம் தெரிவித்தது.
சேவைகள் தற்போது வழக்கநிலைக்குத் திரும்பியுள்ளன.