Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர் செய்தியில் மட்டும்

"சிலுசிலுக்கும் செந்தூரமே, மினுமினுக்கும் முத்தாரமே" - இளையர்களைக் கவரும் மூக்குத்திகள்

வாசிப்புநேரம் -
தீபாவளி நெருங்குகிறது. ஆடைகள், நகைகள் எனப் பலவற்றைப் பார்த்துப் பார்த்து வாங்கும் காலம் இது.

நகைகளைப் பொறுத்தவரை, தோடுகள் சங்கிலிகள் இவற்றைத் தாண்டி இப்போது பிரபலமாக இருக்கும் மற்றோர் அணிகலன் மூக்குத்தி.
 
Aadyaa Singapore
தொடரும் பாரம்பரியம்....நவீனம் கலந்து

அந்தக் காலத்தில் இந்தியப் பெண்கள் மூக்குத்தியை அணிவது வழக்கமாக இருந்தது. பாரம்பரியம் இன்றும் தொடர்கிறது...சற்றே மாறுபட்ட வகையில்.

மூக்குத்திகளைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள முனைந்தது 'செய்தி'.

மூக்குத்தி கார்னர் (Mukuthi Corner) கடையின் உரிமையாளர் வெங்கட், ஆத்யா ஹவுஸ் (Aadya House) இணைய விற்பனைத் தளத்தின் சிங்கப்பூர்க் கிளையை நிர்வகிக்கும் சப்னா இருவரிடமும் பேசியது.

இளையர்களிடையே மூக்குத்தி அணிவது அண்மை காலத்தில் பிரபலமாகி இருப்பதாக இரு கடைகளும் கூறின.

தனித்துவமான வடிவங்கள் இளையர்களை அதிகம் கவர்வதாகக் கூறப்படுகிறது.
Aadyaa Singapore
விலை:

மூக்குத்திகளின் விலை 15 வெள்ளியில் தொடங்குகிறது.

உலோகம், வடிவமைப்பு, நவீனம், கனம் ஆகியவற்றைப் பொறுத்து விலை அமையும் என்கின்றனர் கடைக்காரர்கள்.

இளையர்களிடையே பிரபலமாக உள்ள வகைகள்:
  • மூக்குக் குத்திக் கொள்ளாமல் அணிந்துகொள்ளும் Clip-on வகைகள்
  • சிறிய மூக்குத் துவாரம் உள்ளோருக்கு மெலிதான கம்பி கொண்ட 'wire' வகைகள்
  • சங்கிலியுடன் காதுவரை இணையும் மூக்குத்திகள்


இளையர்களைக் கவரக் காரணம்?

  • "முகத்தின் அழகை அதிகரிக்கும்"

- சர்வேஷினி, 22

  • "புதுமையாக இருக்கிறது"

- ரேக்கா சுந்தர், 27

  • "வேறுபட்ட தோற்றம்"

- சம்யுக்தா, 19

  • "பாரம்பரியத்தைத் தொடர்ந்து பின்பற்ற முடிகிறது"

- சிவாணி, 18

வகை வகையான மூக்குத்திகள்... காணொளியில்...

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்