Skip to main content
சிங்கப்பூரில் தோட்டக்கலையை வளர்க்கப் புது முயற்சி
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சிங்கப்பூரில் தோட்டக்கலையை வளர்க்கப் புது முயற்சி

வாசிப்புநேரம் -
இலவசப் பூங்கா உலா, விதைப் பரிமாற்றம், தாவரங்களை ஓவியமாகத் தீட்டும் வகுப்புகள் போன்ற நடவடிக்கைகளுக்குப் பொதுமக்கள் இன்றிலிருந்து பதிந்துகொள்ளலாம்.

சிங்கப்பூரர்களிடத்தில் தோட்டக்கலைக் கலாசாரத்தை ஊக்குவிக்கும் முயற்சிகளில் இதுவும் ஒன்று.

தேசியப் பூங்காக் கழகத்தின் புதிய முயற்சி சமூகத் தோட்டக்கலை ஆர்வலர்கள் தங்களின் திறனைப் பற்றி மற்றவர்களிடம் பகிர்ந்துகொள்ள வழியமைக்கிறது.

சிங்கப்பூரில் தோட்டக்கலைமீது ஆர்வம் கொண்டவர்களின் எண்ணிக்கையை உயர்த்துவது இலக்கு.

20ஆண்டு நிறைவைக் கொண்டாடும் Community in Bloom திட்டத்தின் ஓர் அங்கமாக அது விளங்கும்.

திட்டம் 2005ஆம் ஆண்டு தொடங்கியதிலிருந்து உள்ளூர்த் தோட்டக்கலைக் குழுக்களின் எண்ணிக்கை 10இலிருந்து 2,000க்குமேல் வளர்ந்திருப்பதைத் தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ சுட்டினார்.

48,000க்கும் அதிகமானோரை அது ஒன்றிணைத்துப் பிணைப்பை வளர்த்துள்ளதாக அவர் சொன்னார்.
ஆதாரம் : Others

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்